Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டீவ் ஜாப்ஸின்.. 10 நிமிட ஃபார்முலா தெரியுமா? நீங்களும் அறிவாளியா ஆகனும்னா இதை ஃபாலோ பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு காண்பது லேசுபட்ட காரியம் கிடையாது. நமக்கே இப்படி எனில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் அவர் சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு காண ஒரு எளிய நடைமுறையை கையாண்டிருக்கிறார். இது பலன் கொடுக்குமா? என்று பலருக்கும் கேள்வி இருந்த நிலையில், நிச்சயம் பலன் கொடுக்கும் என நரம்பியல் நிபுணர்கள் தற்போது கூறியிருக்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜாப்ஸுடன் நெருக்கமாகப் பணியாற்றிய வடிவமைப்பாளர் ஜோனி ஐவ்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி சிக்கல்களை கையாண்டார் என்று விளக்கியிருக்கிறார். அதாவது 10 நிமிடங்களுக்கு மேல் ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் எழுந்து நடக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எளிதில் தீர்வு கிடைத்துவிடும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் நம்பியிருக்கிறார். இருவரும் அமைதியாக நடந்தே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டதாக ஜோனி ஐவ்ஸ் நினைவு கூர்ந்திருக்கிறார்.

Steve Jobs Cambridge US

ஆம் ஸ்டீவ் ஜாப்ஸின் 10 நிமிட ஃபார்முலாவின் நம்பிக்கைக்கு பின்னால், நம்ப முடியாத அறிவியல் உண்மை இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணரும், "ஹைப்பர் எபிஷியன்ட்: ஆப்டிமைஸ் யுவர் பிரெய்ன் டு டிரான்ஸ்ஃபார்ம் தி வே யூ வொர்க்" என்ற புத்தகத்தின் ஆசிரியருமான மிது ஸ்டோரோனி, சமீபத்தில் HBR ஐடியாகாஸ்ட் பாட்காஸ்டில் கலந்துகொண்டார். அவர் இந்த 10 நிமிட ஃபார்முலாவின் பின்னால் இருக்கும் அறிவியல் குறித்து விளக்கியிருக்கிறார்.

எந்தவொரு வேலை பிரச்சனைக்கும் 10 நிமிடங்கள் தீர்வு காண முடியாவிட்டால், மேசையை விட்டு எழுந்து நடந்து செல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மூளையின் சிந்தனை முறைகள் மாறும் என்றும் மிது ஸ்டோரோனி கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது, "நடப்பது மூளையையும், உடலையும் இணைக்கிறது. இது உங்களைச் சரியான விழிப்புணர்வு நிலையில் வைத்திருக்கிறது. இதனால் சோர்வடையவோ அல்லது கவனத்தை இழக்கவோ மாட்டீர்கள். நடக்கும்போது உங்கள் சுற்றுப்புறம் மாறுவதால், உங்கள் கவனம் ஒரு விஷயத்தில் நிலைத்திருக்காது. இது உங்கள் மனதிற்குள் சென்று பிரச்சனைகளை வெவ்வேறு கோணங்களில் ஆராய உதவுகிறது.

நடக்கும்போது, சுற்றுப்புறத்தைப் பற்றிய கவனமும், ஒரே சிந்தனையில் மூழ்காமல் இருப்பதும் மூளையை உகந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. நடக்கும்போது நீங்கள் ஒரே ஒரு பிரச்சனையில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. ஏனென்றால், நீங்கள் எங்கு நடக்கிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த கலவையானது உடலையும், மூளையையும் இணைத்து, நீங்கள் செய்ய விரும்பும் பல்வேறு வேலைகளுக்கு உகந்த மனநிலையை உருவாக்குகிறது" என்று கூறியுள்ளார்.

இவர் மட்டும் கிடையாது, ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியாளர்களும், நடப்பதால் படைப்பு உத்வேகம் கிடைக்கும் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும் மக்களின் படைப்பாற்றல் நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தனர். நடக்கும்போது ஒருவரின் படைப்புத்திறன் சராசரியாக 60 சதவீதம் அதிகரித்தது.

இந்த அதிகப்படியான படைப்புத்திறன் சிறந்த பிரச்சனை தீர்க்கும் திறனுக்கும், பணி உற்பத்தி திறனுக்கும் உதவுகிறது. நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ஆய்வின்படி, வெளியில் நடப்பதால் அறிவாற்றல் செயல்பாடு, கவனம் செலுத்தும் திறன் மற்றும் வேகமான எதிர்வினை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எனவே நீங்களும் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், வேலையில் சிக்கலை சந்தித்தால் உடனே எழுந்து நடக்க தொடங்கி விடுங்கள். வேலையில் புதிய சிந்தனையை கொண்டுவரவே இப்படி நடக்க சொல்கிறார்கள். அதற்காக வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது என நடக்க தொடங்கி விடாதீர்கள். அப்புறம் காசி, ராமேஸ்வரம் வரை நடக்க வேண்டி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+