கதறும் 300 பேர்! "நாடுகடத்தல்.." அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பனாமா அழைத்து செல்லப்படுவது ஏன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். சிலர் நேரடியாகச் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் நிலையில், சிலர் பனாமா அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக நாடு கடத்தப்படாமல் பனாமாவுக்கு ஏன் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறித்து நாம பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்த தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை பல நூறு பேர் இதுபோல நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா பனாமா
இந்தியாவுக்குக் கூட சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுடன் இதுவரை இரண்டு விமானங்கள் வந்துள்ளன. இதற்கிடையே நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது நாடு கடத்துவது குறித்து மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பந்தம் இருக்கிறது. சில காரணங்களால் நேரடியாக நாடு கடத்த முடியாதவர்கள் பனாமா அழைத்து வரப்படுவார்கள். பிறகு அங்கிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம்.
ஹோட்டலில் 300 பேர்
அதன்படி இப்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 300 பேர் இப்போது பனாமாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்குக் குடியேற்ற ஒப்பந்தத்தின் கீழ் மருத்துவச் சிகிச்சை மற்றும் உணவு கிடைக்கும். அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதி இல்லாத சூழலில், குடியேற்ற அதிகாரிகள் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுப்பார்கள்.
இதில் சிக்கல் என்னவென்றால் அங்குள்ளவர்களில் சுமார் 40% பேர் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பவில்லை. சொந்த நாட்டில் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது என இவர்கள் கருதுவதால் தாய் நாட்டிற்கு இவர்கள் திரும்ப மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் மாற்று வழியாக வேறு நாடுகளுக்கு இவர்களை நாடு கடத்தவும் முயற்சிகள் நடந்து வருகிறது. இருப்பினும், அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.
உதவி கேட்டு கதறல்
இதற்கிடையே ஹோட்டலில் இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட மக்கள், தங்களைக் காப்பாற்றும்படியும் தங்கள் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் கூறி உதவி கோருகிறார்கள். ஹோட்டல் கண்ணாடிக்கு அருகே போர்ட்களை வைத்து இவர்கள் பல மணி நேரம் வரை நிற்கிறார்கள். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பனாமா சொல்வது என்ன
இந்தியாவுக்குக் கூட சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுடன் இதுவரை இரண்டு விமானங்கள் வந்துள்ளன. இதற்கிடையே நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது நாடு கடத்துவது குறித்து மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பந்தம் இருக்கிறது. சில காரணங்களால் நேரடியாக நாடு கடத்த முடியாதவர்கள் பனாமா அழைத்து வரப்படுவார்கள். பிறகு அங்கிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம். இதில் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் மட்டுமே பனாாமா அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவருக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
-
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி












Click it and Unblock the Notifications