அதிர்ந்த பிலிப்பைன்ஸ்..சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சத்தில் உறைந்த மக்கள்.. ரிக்டரில் 6.1ஆக பதிவு
வாஷிங்டன்: பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். ஆயிரக்கணக்கான தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடான பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பிலிப்பைன்சின் விகா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணர்ப்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். விகா நகரத்தில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவில் 45 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தற்போது வரை இல்லை.
முன்னதாக நேற்று தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவின் படங்சிடெம்புவான் நகரின் தென்மேற்கே கடலில் 84 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு ஏற்பட்டு இருந்தது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலத்திற்கு அடியே டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதும் "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் இடத்தில் பிலிப்பைன்ஸ் அமைந்து இருப்பதால் அந்த நாட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications