வடகொரிய அதிபரால் டொனால்ட் டிரம்பிற்கு வந்த சிக்கல்.. அப்படி என்னதான் சொல்லிருக்காரு பாருங்க
வாஷிங்டன்: வடகொரியா அமெரிக்கா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியா அதிபர் கிம் ஜான் உன் - க்கு வாழ்த்து கூறியது அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டிருக்கும் நாடு அமெரிக்காவும் வடகொரியாவும் என்பது உலகம் அறிந்த விஷயம். அமெரிக்காவின் பொருளாதார தடை, எச்சரிக்கை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என அடாவடி காட்டி வரும் கிம் ஜாங் உன், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்டவற்றையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு இருக்கிறார்.

பதிலுக்கு அமெரிக்காவும் வட கொரியாவை சீண்டும் விதமாக தென் கொரியாவுடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கூட வடகொரியாவில் உங்கள் ஆட்சியே இல்லாமல் செய்து விடுவோம் என ஜோ பைடன், கிம் ஜாங் உன்னுக்கு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார்.
இப்படி தொடர்ந்து இரு நாடுகளும் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், வடகொரியா அதிபரை பாராட்டி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். உலக சுகாதார அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் போர்டில் வடகொரியா இணைத்துக் கொள்ளப்பட்டதற்கு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறி பதிவிட்டு இருந்தார்.
டொனால்ட் டிரம்ப் தனது பதிவில், "கிம் ஜங் உன்-க்கு வாழ்த்துக்கள்! எனக்கூறி அது தொடர்பான செய்தியையும் பகிர்ந்து இருந்தார். கிம் ஜாங் உன் பெயரை கிம் ஜங் உன் என தவறுதலாகவும் குறிப்பிட்டு இருந்தார். வேண்டும் என்றே இப்படி குறிப்பிட்டு இருந்தாரா அல்லது தவறுதலாக குறிப்பிட்டாரா என ஒருபக்கம் விவாதங்கள் எழுந்த நிலையில், கிம் ஜாங் உன்னை வாழ்த்தி பேசியதற்கு டொனால்ட் டிரம்பிற்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.

சொந்த கட்சியில் இருந்தே கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படும் தலைவர்களும் கட்சியின் மாகாண தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிம் ஜாங் உன் அமெரிக்காவின் எதிரி, அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். டிரம்ப் ஏமாற்றுத்தனமாக நம்புகிறார். அல்லது அதிபர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்றெல்லாம் அவரது கட்சியினர் கடுமையாக வசை பாட தொடங்கினர்.
கிம் ஜாங் உன் -க்கு வாழ்த்து தெரிவித்து தேவையில்லாத சிக்கலில் சிக்கி கொண்டோமே என டிரம்ப் தற்போது யோசிக்காத குறைதான். அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டும் டொனால்ட் டிரம்பிற்கு கிம் ஜாங் உன் - விவகாரம் கொஞ்சம் நெருக்கடியை கொடுக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications