கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை டிஸ்மிஸ் செய்யப்படலாம்.. வந்த அதிர்ச்சி தகவல்.. உண்மையில் என்ன காரணம்
வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் இப்போது கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பில் இருந்து சுந்தர் பிச்சை நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
டெல் உலகில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்தி வந்த நிறுவனம் சுந்தர் பிச்சை. அவர்களின் தேடுபொறி தொடங்கிப் பல வசதிகளை இந்த உலகையே மாற்றி அமைத்துள்ளது எனச் சொன்னால் மிகையாகாது.

ஆனால் கடந்த சில காலமாகவே கூகுள் நிறுவனத்திற்கு நல்ல காலம் இல்லை போல.. டெக் உலகில் பல ஆண்டுகளாக அசைக்கவே முடியாத இடத்தில் இருந்த கூகுள் சில காலமாக அடி மேல் அடி வாங்கி வருகிறது. குறிப்பாக ஏஐ ரேஸில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள்.
மைக்ரோசாப்ட் முதலீடு செய்துள்ள சாட் ஜிபிடி வேற வெலவில் வளர்ந்து வருகிறது. மைக்ரோசாப்ட் தனது சாப்ட்வோர்களிலும் இந்த சாட் ஜிபிடிக்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், ஏஐ துறையில் கூகுள் முற்றிலும் சொதப்பிவிட்டது. அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏஐ அறிமுகப்படுத்தும் போது, அது திடீரென தவறான பதில்களைத் தர அது கூகுள் நிறுவனத்திற்குத் தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஜெமினி ப்ரோ 1.0 மாடலை 230க்கும் மேற்பட்ட நாடுகளில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் அறிமுகம் செய்து இருந்து. மாதம் சுமார் 20 டாலர் கட்டணத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதில் பல வசதிகள் தரப்பட்டு இருந்தது. இருப்பினும், இதன் இமேஜ் ஜெனரேட்டர்களில் சில பிரச்சினைகள் இருக்கிறதாம். அதாவது பன்முகத்தன்மை என்ற பெயரில் ஜெமினி ப்ரோ செய்யும் சில நடவடிக்கையே இதற்கு காரணம்.
ஜெமினி ப்ரோ படங்களை உருவாக்கும் போது பெரும்பாலும் வெள்ளை இன மக்களைக் காட்டுவதே இல்லை என்ற புகார் இருக்கிறது. அதாவது வெள்ளை இன மக்களின் படங்களை உருவாக்கச் சொல்லும் போது துல்லியமாக உருவாக்க முடிவதில்லை. பிரிட்டன் இளவரசர், போப் உள்ளிட்டோரை இது சர்ச்சைக்குரிய வகையில் உருவாக்கி இருக்கிறது. இதனால் ஜெமினி இன ரீதியான பாகுபாட்டைக் காட்டுவதாகப் பலரும் சாடினர்.
முதலில் இந்த சிக்கல் சில வாரங்களில் சரி செய்யப்படும் என கூறப்பட்டது. இருப்பினும், இதில் பல சிக்கல்கள் இருப்பதால் இதை முழுமையாகச் சரி செய்ய சில மாதங்கள் வரை ஆகும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ பிரிவில் இப்படி மொத்தமாகச் சொதப்பியது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியரான சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பிரபல இந்திய அமெரிக்கத் தொழிலதிபரும் முதலீட்டாளருமான சமீர் அரோரா தனது எக்ஸ் பக்கத்தில், "அவர் (சுந்தர் பிச்சை) நீக்கப்படுவார் அல்லது ராஜினாமா செய்வார் என்று நான் நினைக்கிறேன். இது நடந்தே ஆக வேண்டும். ஏஐ துறையில் முன்னணியில் இருந்த போதும் அதில் அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். மற்றவர்கள் வழிநடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.
அதேபோல வல்லுநர்கள் பென் தாம்சன் மற்றும் மார்க் ஷ்முலிக் ஆகியோரும் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கூகுளில் உள்ள சில விஷயங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக சிஇஓ சுந்தர் பிச்சையை மாற்றுவது சரியாக இருக்கும் எனக் கூறியிருக்கின்றனர். தற்போதைய தலைமை வரும் காலத்தில் கூகுளை வழிநடத்துமா என்பது சந்தேகமே எனக் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications