நடக்க முடியாதாம்! ரத்த கட்டிகள் வேறு.! சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும்போது ஏற்படும் சிக்கல் என்ன?
வாஷிங்டன்: நீண்ட கால முயற்சிக்குப் பிறகு ஒரு வழியாக சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் பூமிக்குத் திரும்ப உள்ளனர். இருப்பினும், பூமிக்குத் திரும்பியவுடன் அவர்களின் வாழ்க்கை நார்மலாக இருக்காது. அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ரத்தத்தில் ஏற்படும் கட்டிகள் முதல் நடக்கவே முடியாத சூழல் வரை மோசமான சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் வெறும் 8 நாள் விண்வெளி ஆய்வுக்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த 8 நாள் பயணம் இப்போது 9 மாதங்களாக மாறிவிட்டது. இத்தனை நாட்களாக சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சூழலில், இப்போது ஒருவழியாக அவர்கள் பூமிக்குத் திரும்பும் சூழல் பிரகாசமாக நிலவுகிறது.

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
அவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் ஏற்கனவே விண்வெளி மையத்திற்குச் சென்றுவிட்டது. மாற்று வீரர்கள் அங்குச் சென்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமி திரும்ப உள்ளனர். இருப்பினும், பூமி திரும்பிய உடன் அவர்களுக்கு ரத்தக் கட்டிகள் தொடங்கிப் பல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
நடக்கவே முடியாது
அதில் முதல் மற்றும் பிரதான பிரச்சினை பேபி ஃபீட் (baby feet) என்பார்கள். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவருக்கும் இந்த பேபி ஃபீட் எனப்படும் குழந்தை பாதங்கள் என்ற வினோத நிலை உருவாகியிருக்கலாம். அதாவது விண்வெளி வீரர்கள் பல மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பும் போது அவர்களின் பாதங்கள் ஒரு குழந்தையின் பாதங்களைப் போல மென்மையாக மாறும். இதனால் பூமி திரும்பியவுடன் அவர்களால் நடக்கவே முடியாது. நடக்கும் போது தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.
பொதுவாக பூமியில் நடக்கும்போது நமது பாதங்கள் புவி ஈர்ப்பை எதிர்கொள்ளும். மேலும், தரையுடன் உராய்வை எதிர்கொள்ளும். இதனால் நடந்து நடந்து நமது உள்ளங்கால் தோல் தடிமனாக மாறியிருக்கும்.. இது நமது தோலை பாதுகாத்து, அசவுகரியம் மற்றும் வலியை நாம் உணரவிடாமல் தடுக்கிறது.. ஆனால், விண்வெளியில் இருக்கும் போது நாம் நடக்கத் தேவையிருக்காது.
வலி தாங்கவே முடியாது
பல மாதங்கள் அங்கேயே இருந்தோம் என்றால் காலில் உள்ள தடினமான தோல் மீண்டும் மென்மையானதாக மாற தொடங்கும். இதனால் நடக்க ஆரம்பிக்கும் போது தாங்கவே முடியாத வலி ஏற்படும். நடந்து நடந்து காலில் உள்ள தோல் மீண்டும் தடிமனாக மாறும் வரை இந்த வலி இருக்கும்.. சில வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை இந்த வலி இருக்கும். நடக்கும் போது சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.
எலும்பின் அடர்த்தி குறையும்
அதேபோல ஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் அதிக காலம் இருக்கும் போது எலும்பு அடர்த்தி குறையும். விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் எலும்பின் அடர்த்தி தொடர்ந்து குறைவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.. அவர்களின் எடை தாங்கும் எலும்புகளின் அடர்த்தி ஒரு சதவீதம் வரை குறையுமாம். இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய சிக்கல் உருவாகும். அதேபோல பூமியில் இருப்பதை விடத் தசைகளின் வேலையும் விண்வெளியில் குறைவாகவே இருக்கும். இதனால் தசைகளும் பலவீனமடைகின்றன.
ரத்த கட்டிகள்
மேலும், விண்வெளி வீரரின் உடலில் அளவும் சுருங்குகிறது. ஏனென்றால் விண்வெளியில் இருக்கும் போது நமது உடல் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியதில்லை.. மிகக் குறைவாக வேலை செய்ய வேண்டியிருப்பதால், விண்வெளி வீரரின் உடலில் ரத்த அளவும் சுருங்குகிறது. உடலில் ரத்தம் பாயும் விதமும் மாறுகிறது. சில பகுதிகளில் ரத்தம் மெதுவாகப் பாய்கிறது.. இது உடலில் கட்டிகளுக்கு வழிவகுக்கும். திரவக் குவிப்பு கண் இமைகளின் வடிவத்தையும் மாற்றுகிறது.. பார்வையைப் பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கண்ணாடி அணிந்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications