செம தில்.. இந்தியாவின் எழுச்சியை ஆதரிக்கிறோம்.. ஆச்சர்யப்பட்ட அமெரிக்கா.. திடீர் அறிக்கை
வாஷிங்டன்: "சீனாவை எதிர்த்து நிற்க விருப்பமும் திறன்களும் இருப்பதை இந்தியா நிரூபித்துள்ளது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணை உதவியாளரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா பணியகத்தின் இயக்குநருமான லிசா கர்டிஸ் கூறினார்.
Recommended Video
அமெரிக்க சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனுக்கு வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரியாகவும் உள்ள லிசா கர்டிஸ் கூறுகையில், சீ லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனாவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீனாவின் மக்கள் ராணுவத்தின் ஆக்கிரமிப்புடன் பொருந்துகிறது" என்று கூறினார்.
இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் ஒரு சக்தியாகவும், நிகர பாதுகாப்பு வழங்குநராகவும் திகழும் இந்தியாவின் எழுச்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றும் கர்டிஸ் கூறினார்.

மற்ற நாடுகளுக்கு ஊக்கம்
தற்போதைய இந்தியா-சீனா இடையிலான நெருக்கடி பற்றி, கர்டிஸ் கூறுகையில், "லடாக்கில் ஆக்கிரமித்த சீனாவுக்கு பதிலடியாக இந்தியா, சீனாவின் ஆப்களை தடைசெய்துள்ளது. சீனாவின் முதலீட்டு ஒப்பந்தங்களை நிறுத்தியுள்ளது, இதன் மூலம் சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை இந்தியா விதித்துள்ளது. . இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற நாடுகள் இதை மிகவும் கவனமாக கவனித்து வருவதாக நான் நினைக்கிறேன், மேலும் இந்தியாவின் இந்த தீர்மானம் மற்ற நாடுகளுக்கு ஊக்கமாக இருக்கும்.

சீனா நினைப்பு
ஏனெனில் சில நாடுகள் இந்தியாவை விட சீனாவின் "மோசமான செல்வாக்கை" நன்கு அறிந்திருக்கின்றன. இந்நிலையில் லடாக்கில் சில பதட்டமான வாரங்களுக்குப் பிறகு சீன மற்றும் இந்தியப் படைகள் விலக்கப்படுவதைக் காண முடிகிறது... ஆனால் இந்த அழுத்தம் இந்தியாவுடன் எல்லை பாதுகாப்பு கோட்டு பகுதியில் சீனாவின் நிலைப்பாடு பற்றியதாகும். இந்தியா உறவை சீனா எவ்வாறு கருதுகிறது என்பதை பற்றியது. இது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எல்லை விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான இயக்கவியலையே மாற்றிவிடும் .

இந்தியாவின் வளர்ச்சி
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சீனா இந்தியாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியதாக காணப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இராணுவத் திறன்கள் அதிகரிக்க தொடங்கியவுடன், இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்பட்டு ஆசியாவில் பெரிய அளவில் முன்னேறும் என்று நினைத்த காலம் இருந்தது. ஆனால் 2010 ம் ஆண்டுக்கு பின்னர் நீண்டகால எல்லைப் பிரச்சினையில் வேறுபாடுகள் மீண்டும் தோன்றியுள்ளன. ஒவ்வொரு நாடும் மற்றொன்றின் எழுச்சிகள் காரணமாக "சங்கடமாக" மாறியிருக்கிறது. இலங்கை, மாலத்தீவு மற்றும் நேபாளம் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் செல்வாக்கு, பொருளாதாரம் முதல் உள்நாட்டு அரசியல் வரை மேலும் மேலும் தலையிடும் வகையில் நகர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு சந்தேகம்
சீனா எப்படி பார்க்கிறதோ அப்படித்தான் அமெரிக்காவும் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே சீனாவின் பொருளாதார வழித்தட திட்டம் குறித்து ஒரு சந்தேகம் இருந்தது ... அவர்கள் 2017ல் பி.ஆர்.ஐ ( பொருளாதார வழித்தடம்) மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பவில்லை. சீனாவின் சிறப்பு பொருளாதார வழித்தடம் பற்றிய முயற்சியைப் பற்றிய அவர்களின் ஆரம்பகால சந்தேகம் உண்மையில் வெளிவருகிறது என்று நான் நினைக்கிறேன், அவை இப்போது மிகவும் மதிப்புமிக்கதாகத் தெரிகிறது.

உறவு வலுவடையும்
அமெரிக்க-இந்தியா இடையே நட்புறவு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை விட அதிகம். இது எங்கள் இரு நாடுகளையும் மிகவும் வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றிய ஜனநாயக மரபுகளைப் பற்றியதாகும். இந்தோ பசிபிக் பகுதியில் திறந்த மற்றும் வெளிப்படையான பிராந்தியத்திற்கு இரு நாடுகளும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமெரிக்கா-இந்தியா இடையே நட்புறவு இன்னமும் ஆழமடையும். அந்த உறவை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதையும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பிற நாடுகள் தங்கள் இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதையும், அவர்களுக்கு சீனாவுக்கு தேர்வுகள் மற்றும் மாற்று வழிகள் உள்ளன என்பதையும் நீங்கள் விரைவில் பார்க்க போகிறீர்கள்.

சீனாவின் சிபிஇசி
இந்தியாவை ஒப்பிடும் போது சீனா-பாகிஸ்தான் உறவு (CPEC) மிகவும் நெருக்கமாக வளர்ந்துள்ளது. "சிபிஇசிக்கான சீன உறுதிமொழிகள் இப்போது 60 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளன, ஆனால் சிபிஇசி வெளிநாட்டு உதவி அல்ல, அதேநேரம் சீனாவின் சொந்த வளர்ச்சியை ஈட்டிய பங்கு முதலீடு அல்ல. சிபிஇசி என்பது ஒரு நாட்டின் இறையாண்மை கடனால் நிதியளிக்கப்படுகிறது, அதை திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த ஆபத்தை பாகிஸ்தான் மக்கள் சுமக்கின்றனர். இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் நன்மை " இவ்வாறு கூறினார்.
-
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்! -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்?












Click it and Unblock the Notifications