தெலுங்கானா இன்ஜினியரை சுட்டுகொன்ற அமெரிக்க போலீஸ்.. வேலைக்கு போனவருக்கு நேர்ந்த சோகம்.. ஷாக்
வாஷிங்டன்: தெலுங்கானாவை சேர்ந்த 29 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது நிஜாமுதீன் அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வந்தார். தற்போது அவர் அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கனாா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஹஸ்னுதீன். இவரது மகன் பெயர் முகமது நிஜாமுதீன். இவருக்கு வயது 29. இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு அங்கேயே சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.
நண்பனுடன் சண்டை
இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி முகமது நிஜாமுதீனுக்கும், அவரது அறையில் தங்கியிருக்கும் நண்பருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே முகமது நிஜாமுதீன் கத்தியை எடுத்து தனது நண்பரை குத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் துப்பாக்கிச்சூடு
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்டா கிளாரா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். கத்தியை காட்டி போலீசாரையும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
போலீஸ் தந்த விளக்கம்
இதில் குண்டு காயமடைந்த முகமது நிஜாமுதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி கோரி மார்கன் கூறியதாவது:
‛‛ஒரு அறையில் தங்கியிருந்த 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியது. போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது முகமது நிஜாமுதீன் கத்தியை கையில் வைத்து தாக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். நண்பரை மீண்டும் கத்தியால் தாக்குவதாக கூறினார். அதன்பிறகு இபு்படி நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து 2 கத்திகள் கைப்பற்றப்பட்டது '' என்று கூறினார்.
குடும்பத்தினர் கதறல்
முகமது நிஜாமுதீன் இறப்பு பற்றி அறிந்த குடும்பத்தினர் கதறி உள்ளார். இதுபற்றி அவரது தந்தை முகமது ஹஸ்னுதீன் கூறுகையில், ‛‛என் மகன் அமெரிக்க போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பதை அவனது நண்பன் மூலமாக தெரிந்து கொண்டேன். நேற்று காலையில் தான் இந்த மேட்டர் எனக்கு தெரியவந்தது.
அறையில் நண்பனுடன் ஏற்பட்ட தகராறில் இப்படி நடந்துள்ளது. எந்த மாதிரியான பிரச்சனை நடந்தது? எதற்காக துப்பாக்கியால் சுட்டனர்? என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை'' என்று கதறி அழுதார்.
வெளியுறவுத்துறையிடம் உதவி கேட்பு
மேலும் தனது மகனின் உடலை அமெரிக்காவில் இருந்து தெலுங்கானா கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்று அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மத்திய அரசின் அதிகாரிகள் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications