விரித்த வலையிலேயே சிக்கும் அமெரிக்கா.. சீனாவுக்கு போகும் டிரம்ப்! ஜி ஜின்பிங் பிளான் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மே.13-15 தேதிகளில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அவர், முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார். சீனா மீது அமெரிக்கா ஏற்கெனவே வரியை விதித்திருக்கிறது. இந்த வரிதான் சீனாவுக்கு எதிராக தான் விரித்த வலையாக டிரம்ப் நம்புகிறார். ஆனால் கைழுத்தாக போகும் ஒப்பந்தம்தான் மிகப்பெரிய வலை. அதில் டிரம்ப் சிக்கப்போகிறார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆட்சியாளர்களை பொறுத்தவரை, தங்கள் நாடுதான் எப்போதும் டாப்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். டிரம்பும் அப்படித்தான் யோசிக்கிறார். ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை அவருக்கு யாராவது போய் சொல்லுங்களேன்!

trump

சீனா vs அமெரிக்கா

சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது டிரம்புக்கும் தெரியாமல் இல்லை. எனவே, சீன பொருட்களுக்கு 125% வரியை போட்டிருக்கிறார். இது அந்நாட்டின் வளர்ச்சியை தாமதமாக்கும் என்று நம்புகிறார். இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் சீனா தன்னிடம் வந்து கெஞ்சும் என்றும் எதிர்பார்க்கிறார். சீனாவுக்கு எதிராக அவர் அவர் விரித்த வலை இது என்று நம்பிக்கொண்டிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை சுற்றி நடக்கும் விஷயமே வேற!

டாப்பில் சீனா

சீனா அரிய தாதுக்கள்/கனிமங்கள் விஷயத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. மற்ற நாடுகளில் இந்த தாதுக்கள்/கனிமங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அதை உற்பத்தி செய்வதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். அந்த செலவுகளைவிட மலிவான விலையில் சீனா தாதுக்கள்/கனிமங்களை விற்பனை செய்கிறது. எல்லா நாடுகளுக்கும் விற்பனை செய்யாமல் அமெரிக்கா போன்ற தனக்கு வேண்டாத நாடுகளுக்கு விற்பனையை நிறுத்தியுள்ளது. அல்லது மிக குறைவான அவில்தான் கொடுக்கிறது. இப்படியாக உலக அளவில் இந்த விஷயத்தில் சீனா டாப்பில் இருக்கிறது.

இப்போ மேட்டர் என்னவெனில், மே.13-15 தேதிகளில் சீனாவுக்கு போகும் டிரம்ப் எந்த மாதிரியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறார் என்பதுதான் உலகம் முழுவதும் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு.

ஒப்பந்தங்களில் வலை

தான் விரித்த வலையில் சீனா விழுந்துவிட்டது, அதனால்தான் ஒப்பந்தம் செய்ய கூப்பிடுகிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். அந்த பக்கம் சீனா, அமெரிக்காவை அழிந்து வரும் சாம்ராஜ்ஜியமாக பார்க்கிறது. எனவே எரிகிற வீட்டில் புடுங்குற வரைக்கும் லாபம் என நினைத்து, அமெரிக்காவால் என்னவெல்லாம் காரியம் ஆகுமோ அதை சாதித்துக்கொள்ள சீனா ரெடியாகி வருகிறது. இப்படி யோசித்துதான் ஒப்பந்தங்களை ரெடி செய்து வருகிறது.

ஏமாறப்போகும் டிரம்ப்

அரிய தாதுக்கள்/கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்த சந்திப்பில் டிரம்ப் கோரிக்கை வைப்பார். பதிலுக்கு சீனா, தங்கள் மீதான 125% வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், சீன பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்த தடையும் இல்லாமல் நுழைய வேண்டும் என்றும் வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படித்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆக யார் விரித்த வலையில் யார் சிக்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. சீனா ஒரு பக்கம் வளர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+