உலகின் பலவீனமான ராணுவத்தை கொண்ட 10 நாடுகள் எது தெரியுமா? லிஸ்ட்ல இந்த நாடும் இருக்கா!
வாஷிங்டன்: உலகில் சக்தி வாய்ந்த ராணுவ கட்டமைப்பு மற்றும் ஆயுத பலத்தை கொண்ட நாடு எது என்றால் யோசிக்காமல் அமெரிக்காவை கை காட்டிவிடுவோம். அதேவேளையில், உலகில் பலவீனமான ராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா? அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
எந்த ஒரு நாட்டிற்கும் பாதுகாப்புக்கு அதன் ராணுவ பலம் இன்றியமையாதது ஆகும். உலக அளவில் வல்லாதிக்க நாடாக தன்னை நிறுவிக்கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கடும் போட்டோ போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாயாக ராணுவத்திற்கு பட்ஜெட்டில் இந்த நாடுகள் ஒதுக்குகின்றன.

அமெரிக்கா கடந்த ஆண்டில் ராணுவத்திற்கு மட்டும் 876.9 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஒதுக்கியது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா ( 292 பில்லியன் டாலர்) ரஷ்யா (86.4 பில்லியன் டாலர்) இந்தியா 81.4 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்படி உலக அளவில் ராணுவத்திற்கு பல லட்சம் கோடிகளை செலவு செய்து தங்கள் நாட்டின் வலிமையை பறைசாற்றிக் கொள்ள ஒவ்வொரு நாடும் முனைப்பு காட்டுகிறது.
உலக அளவில் சக்தி வாய்ந்த ராணுவ கட்டமைப்புகளையும் ஆயுத பலங்களையும் கொண்ட நாடுகளில் மேற்கூறிய நாடுகள் முதன்மை இடம் வகிக்கிறது என்றால், இதே பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள் எவை என்பது தெரியுமா? அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். 60 காரணிகளை அடிப்படையாக கொண்டு Global Firepower (GFP) என்ற அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பலவீனமான ராணுவ அமைப்பைக் கொண்ட 10 நாடுகளை காணலாம்.
பூடான்: இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான பூடானின் ராணுவம் மிகவும் பலவீனமானது என்று கூறப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைப்பிரதேசங்களை கொண்ட பூடான், தனது பாதுகாப்புக்கு பெரிதும் இந்தியாவையை சார்ந்துள்ளது என்று சொன்னால் கூட அது மிகையல்ல. ஏனெனில் அந்த நாட்டின் மூன்று பக்கமும் இந்தியாவையே அதன் எல்லைகளாக கொண்டுள்ளது. பூடான் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சுமார் 8 ஆயிரம் ஆகும்.
பெனின்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று பெனின். இந்த நாட்டின் மக்கள் தொகை 1.3 கோடியாகும். பெனின் பலவீனமான ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் பூடானுக்கு முந்தைய இடத்தில் உள்ளது. புர்கினோ பாஸோ, நைஜர் குடியரசு , நைஜிரியா, டோகோ குடியரசு ஆகிய நாடுகளை பெனின் தனது எல்லைகளாக பகிர்ந்து கொள்கிறது.
மல்தோவா: ஐரோப்பிய நாடுகளில் ஒன்று மல்தோவா. ஐரோப்பாவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மோல்டோவா பார்க்கப்படுகிறது. இந்த நாட்டிற்கு மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரனும் அமைந்துள்ளன.
சோமாலியா: கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் வறுமை நிறைந்த நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் எல்லைகளாக ஜிபூட்டி, கென்யா, ஏமன், எதியோப்பியா ஆகியவற்றுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியபெருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடாகும். சோமாலியா தவிர லிபேரியா, சுரிநாம், பெலீசு, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஐஸ்லாந்து, சியேரா லியோனிக் குடியரசு, ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications