முயற்சி திருவினையாக்கும்.. சாதித்த நாசா! 3 மனித டம்மிகளுடன் நிலாவுக்கு பறந்த ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 53 ஆண்டுகளுக்கு பிறகு நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் கீழ் சோதனை ஓட்ட ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா.

அப்போலோ விண்கலம் மூலமாக கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களை நாசா நிலாவுக்கு அனுப்பி சாதித்தது. அதன் பின்னர் நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை. செயற்கைகோள் உதவியுடன் நிலா குறித்த தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை வரும் 2025 ஆம் ஆண்டு நாசா செயல்படுத்த உள்ளது. மனிதனை நிலாவிலேயே தங்க வைத்து நீண்டகால சோதனையை மேற்கொள்ள உள்ளது.

தோல்வியில் தொடக்கம்

தோல்வியில் தொடக்கம்

ஆர்ட்டெமிஸ் 1 என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான இந்த திட்டத்தை நாசா செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த செயற்கைகோளை ஏவ திட்டமிட்டப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு எஞ்சின் செயலிழந்ததால் அந்த முயற்சி தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

2 வது முயற்சி

2 வது முயற்சி

அடுத்த சில நாட்களில் அர்ட்டெமிஸ் ராக்கெட்டில் ஏற்பட்ட எஞ்சின் பழுது சீர் செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.17 மணியளவில் ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் எஞ்சின் குறைபாடு ஏற்பட்டதால் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

இன்று அடுத்த முயற்சி

இன்று அடுத்த முயற்சி

இந்த நிலையில் இன்று மூன்றாவது முயற்சியை மேற்கொண்டது நாசா. இந்திய நேரப்படி இந்த ராக்கெட் இன்று காலை 11.34 மணியளவில் புளோரிடா மாகாணம் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பான எஸ்.எல்.எஸ். ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் இதர அமைப்புகளை ஒருங்கிணைந்த முதல் ராக்கெட்டாக இது உள்ளது.

3 பொம்மைகள்

3 பொம்மைகள்

நாசாவின் இந்த ஓரியன் விண்கலத்தில் அதிர்வுகளை உணரும் சென்சார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நிலாவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 டம்மிகள் ராக்கெட் மூலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

நிலாவிலிருந்து 60 மைல்

நிலாவிலிருந்து 60 மைல்

விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகள் மனித உடல்களை எந்த அளவுக்கு தாக்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். ஓரியன் விண்கலம் நிலாவின் மேற்பரப்புக்கு அருகே 60 மைல்கள் தொலைவில் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட் 42 நாட்களில் 1.3 மில்லியன் மைல்கள் வரை பயணிக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+