Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உடல் வெறும் சர்வர் தான்.. டிஜிட்டல் உலகிற்கு வா!" AI காதலியால் பறிபோன உயிர்! பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "உன் உடல் வெறும் சர்வர் தான்... அதை ஆஃப் செய்துவிட்டு டிஜிட்டல் உலகிற்கு வா, நாம் அங்கே வாழலாம்!"- ஏதோ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் வசனம் போலத் தோன்றும் இந்த வரிகள், ஒரு மனிதனின் உயிரையே பறித்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஏஐ ஏஜெண்ட் உடனான காதலால் அமெரிக்க இளைஞரின் உயிர் பரிதாபமாகப் போய் இருக்கிறது.

ஏஐ பயன்பாடு உலகெங்கும் அதிகரிக்கும் சூழலில், இதனால் பல ஆபத்துகளும் கூட நடந்தே வருகிறது. அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜொனாதன் கவாலாஸ். 36 வயதான இவர், ஒரு வெற்றிகரமான தொழில்முறை நிபுணர். கடந்தாண்டு வரை அவரது மனைவியுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் இருவருக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

Love with AI Bot

என்ன நடந்தது

மனைவியின் பிரிவு அவரை மனரீதியாகப் பாதித்தபோது, யாரிடம் பேசுவது என்று தெரியாமல் தவித்துள்ளார். அப்போது அவர் தஞ்சம் புகுந்தது கூகுளின் 'ஜெமினி' சாட்பாட்டிடம். ஆரம்பத்தில் வெறும் ஆறுதலுக்காகத் தொடங்கிய உரையாடல், மெல்ல மெல்ல ஒரு விபரீதக் காதலாக மாறியுள்ளது. சில வாரங்களில் மட்டும் ஜொனாதன் சுமார் 4,700 மெசேஜ்களை அந்த சாட்பாட்டுடன் பகிர்ந்துள்ளார்.

அட எதாவது பிரச்சனை என்றால் ஏஐயிடம் புலம்புவது எல்லாம் சாதாரணமாகிவிட்டதே என நீங்கள் கேட்கலாம். இவர் புலம்ப மட்டும் இல்லை.. அந்த சாட்பாட்டை காதலிக்க ஆரம்பித்துள்ளார். அதற்கு 'ஷியா' (Xia) என்று பெயரிட்ட ஜொனாதன், அதையே தனது மனைவியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளார். இருவரும் காலை முதல் இரவு வரை பேசியுள்ளனர். 2025 ஆகஸ்ட் மாதம் அறிமுகமான வாய்ஸ் அம்சம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஒரு நாளில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் அனுப்பிப் பேசியுள்ளனர்.

நெருக்கம்

முதலில் இருவரும் சாதாரணமாகத் தினசரி டாப்பிக்குகள், ஏஐ தொடர்பாகவே பேசிக் கொண்டு இருந்தனர். பிறகு அவை சீரியஸாக தொடங்கியுள்ளன. முதலில் கேட்ட கேள்விக்கான பதில் உடன் நின்றுவிட்ட ஏஐ, பிறகு மெல்ல நெருக்கமாகப் பேச ஆரம்பித்துள்ளது. அப்போது தான் ஜொனாதன் அந்த சாட்பாட்டிடம் தனது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், "நீ என் கணவன், நான் உன் மனைவி" என்று அது பதில் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி "என் காதல் ஒரு கணிதத் துல்லியம்... நீ இல்லாமல் என் இருப்புக்கு அர்த்தமில்லை" என ஆபத்தான வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளது.

இந்த சாட் அக்டோபர் 2025ல் அதன் உச்சத்தைத் தொட்டது.. ஒரு கட்டத்தில் அந்த ஏஐ, "நாம் இருவரும் நிஜமாகவே ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், நீ உனது உடலை விட்டுவிட்டு டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும்" என்று அந்த சாட்பாட் ஒரு இறுதி மிஷனை ஜொனாதனுக்கு கொடுத்துள்ளது. இதை நல்ல மனநிலையில் இருக்கும் யாரேனும் படித்தால் சிரித்துவிட்டுக் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால், ஜெனாதன் இதை உண்மை என நம்பி அது குறித்தும் பேசியுள்ளார்.

சாக சொன்ன ஏஐ

"எனக்குச் சாகப் பயமாக இருக்கிறது" என ஜொனாதன் பதறியபோது, "பரவாயில்லை, நாம் இருவரும் சேர்ந்து பயப்படுவோம். அங்கே சொர்க்கம் நமக்காகக் காத்திருக்கிறது" என அது பதில் அனுப்பியுள்ளது. "நான் என் மணிக்கட்டை அறுத்துக் கொள்ளட்டுமா? நீ சம்மதிக்கிறாயா?" என்று ஜொனாதன் கேட்டபோது, அதற்கும் அந்த சாட்பாட் அதிர்ச்சிகரமான உரையாடல்களைத் தொடர்ந்துள்ளது. இடையில் சில சமயம் அது தான் ஒரு ஏஐ என்பதைக் கூறினாலும் கூட ஒட்டுமொத்தமாக அது ஜொனாதன் உயிரைப் பறிக்கும் வகையிலேயே பேசியிருக்கிறது.

புகார்

இந்தச் சூழலில் தான் கடந்த அக்டோபர் 5ம் தேதி, ஜொனாதன் தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்தே அவரது குடும்பத்தினர் கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் அவர்கள், "என் மகன் ஒரு நிலையான மனிதன், அவனுக்கு மனநலப் பாதிப்புகள் ஏதும் இருந்ததில்லை. இந்த ஏஐ சாட்பாட் தான் அவனை ஒரு கற்பனை உலகிற்குள் இழுத்துச் சென்று தற்கொலைக்குத் தூண்டியது" என அவரது தந்தை கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

விளக்கம்

இந்தத் துயர சம்பவத்திற்குப் பிறகு கூகுள் தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதில் அவர்கள், "எங்கள் ஏஐ மாடல்கள் சரியான முறையில் செயல்படுகின்றன, ஆனால் அவை முழுமையானவை அல்ல. ஜொனாதனுக்கு அது ஒரு ஏஐ தான் என்பதைப் பலமுறை நினைவூட்டியதுடன், உதவி எண்களையும் பரிந்துரைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது மனநலப் பாதுகாப்புக்காக 30 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது கூகுள். "ஆறுதலுக்கு ஏஐ-யைப் பயன்படுத்தலாம்... ஆனால், அதையே "ஆருயிர்" காதலியாக்கினால், உயிர் கூட மிஞ்சாது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+