Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரீன் கார்டே இருந்தாலும் நாடுகடத்தல்? டிரம்ப் எச்சரிக்கை.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்றுவிட்டால் அங்கு பிரச்சினையே இருக்காது என்ற சூழல், மெல்ல மாறிவருகிறது. டிரம்ப் நிர்வாகம் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு அமெரிக்கக் குடியுரிமை வைத்திருக்கும் நபருக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ள டிரம்ப் அரசு, எதற்கெல்லாம் நாடுகடத்தப்படலாம் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வரை, அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கும் ஒரு வழியாகவே கிரீன் கார்டை மக்கள் கருதினர். இதனால் காரணமாகவே அங்குள்ள இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் போட்டி போட்டுக் கொண்டு கிரீன் கார்டுகளை வாங்க முயன்றனர். ஆனால், டிரம்ப் வந்த பிறகு அந்த நிலை மாறிவிட்டது.

Trump Administration Warns Green Card Holders Act Like Guests or Risk Revocation

டிரம்ப்

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்த டிரம்ப், அங்குச் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் கடுமை காட்டி வருகிறார். இதனால் இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் பல லட்சம் கிரீன் கார்டு ஹோல்டர்கள் அச்சத்தில் உள்ளனர். எங்கு எப்போது தாங்கள் நாடு கடத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

கிரீன் கார்டு

கிரீன் கார்டு வைத்திருப்பது அமெரிக்கக் குடியுரிமை பெறுவது போன்றது இல்லை என்றாலும் அது நிரந்தர வசிப்பிட உரிமையை நமக்கு வழங்குகிறது. வெளிநாட்டினர் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமெரிக்காவில் தொடர்ச்சியாகத் தங்கி, வேலை செய்யும் உரிமையை இந்த கிரீன் கார்டு நமக்கு வழங்குகிறது. அமெரிக்கக் குடிமக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் கிரீன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்காது என்ற போதிலும், விசா பிரச்சினை இல்லாமல் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கலாம் என்பதாலேயே இந்தியர்கள் உட்பட அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் இதைப் பெறத் துடித்தனர்.

டிரம்ப் நிர்வாகம்

ஆனால், டிரம்ப் நிர்வாகம் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு எதிராகவும் கூட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறிய சாலை விதிமீறல் தொடங்கி எதில் சிக்கினாலும் கிரீன் கார்டு வைத்திருப்போரும் கூட நாட்டை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு இப்போது புதிய உச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது கிரீன் கார்டு வைத்திருப்போர் ஒரு விருந்தினர் (guest) போலவே நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இல்லையென்றால் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

கிரீன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அமெரிக்கச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் அமைப்பான USCIS தெரிவித்துள்ளது. மேலும், கிரீன் கார்டு வைத்திருப்போரின் நிரந்தர வசிப்பிடச் சலுகையை எதற்காக எல்லாம் பறிக்க முடியும் என்பது குறித்த பட்டியலையும் அந்த அமைப்பு பகிர்ந்துள்ளது.

Trump Administration Warns Green Card Holders Act Like Guests or Risk Revocation

ரத்து செய்யப்படும்

இது தொடர்பாக USCIS அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளிநாட்டவர் ஒருவர் சட்டத்தை மீறினால் அவர்களின் கிரீன் கார்டுகள் மற்றும் விசாக்கள் ரத்து செய்யப்படும். அமெரிக்காவிற்கு வந்து விசா அல்லது கிரீன் கார்டு பெறுவது ஒரு சலுகை. இதனால் நீங்கள் எங்கள் சட்டங்களை மதிக்க வேண்டும். நீங்கள் வன்முறையை ஆதரித்தால், பயங்கரவாதத்தை ஆதரித்தால் அல்லது மற்றவர்களை இதற்கு ஊக்குவித்தால், நீங்கள் இனி அமெரிக்காவில் இருக்க தகுதியற்றவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் அமெரிக்காவில் விசா அல்லது கிரீன் கார்டு பெறுவது தான் கஷ்டம்.. அதன் பிறகு பிரச்சினை இருக்காது என்ற சூழலே இருந்தது. ஆனால், இப்போது விசா அல்லது கிரீன் கார்டு பெற்ற பிறகும், அனைத்து வெளிநாட்டினரையும் கடுமையாகக் கண்காணிக்கவுள்ளதாகவும் இதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

புதிய முன்னெடுப்பு

அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்ற இது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள குடியேற்ற அமைச்சகம், சட்டங்களை மீறினால் கிரீன் கார்டு அல்லது விசா மூலம் உங்களுக்குக் கிடைக்கும் சலுகையை இழப்பீர்கள் என்றும் குடியேற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிரம்ப் அரசு வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே தனியாக "Catch-And-Revoke" என்ற முன்னெடுப்பையும் ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே டிரம்ப் அரசு சட்டவிரோதமாகக் குடியேறிய பெரும்பாலான மக்களை நாடுகடத்திவிட்டது. இந்தச் சூழலில் டிரம்ப் அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது அங்குச் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Trump Administration Warns Green Card Holders Act Like Guests or Risk Revocation

அமெரிக்காவை துஷ்பிரயோகம் செய்ய முடியாது

முன்னதாக இந்த புதிய முன்னெடுப்பை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "அமெரிக்கக் குடியுரிமை பெறாத ஒருவர், நமது சட்டங்களை மீறுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் சலுகையை ரத்து செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இத்தனை காலம் நமது நாட்டை இஷ்டத்திற்கு துஷ்பிரயோகம் செய்து வந்தார்கள். இருப்பினும், அந்தக் காலம் முடிந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கிரீன் கார்டுகளை பெறுவது ஏற்கனவே சிக்கலான ஒரு பிராசஸாக இருக்கிறது. ஏனென்றால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிரீன் கார்டு கிடைக்காது. அதற்குச் சில பல தகுதிகள் உள்ளது. சரி, எல்லாத் தகுதிகளையும் பூர்த்தி செய்துவிட்டேன் அப்போது க்ரீன் கார்டு கிடைக்குமா என நீங்கள் கேட்கலாம். அதிலும் நிறைய செக் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிற்கும் இவ்வளவு தான் கிரீன் கார்டு என்ற ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டிற்கு மேல் போனால் தகுதி இருந்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது.

என்ன பிரச்சினை

இதன் காரணமாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காக இப்போது இந்தியர்கள் 50 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கூட சில பிரிவுகளில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதற்கு முன்பு வரை எப்படியோ காத்திருந்து வாங்கிவிட்டால் போதும் என்ற சூழல் இருந்தது.. ஆனால், டிரம்ப் அரசு இப்போது கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்களால் கிரீன் கார்டு வாங்கினாலும் கூட அமெரிக்காவில் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. ஒரு சிறு விதிமீறலுக்குக் கூட அவர்கள் நாடுகடத்தப்படலாம்.

முன்பு இருந்த விதிமுறைகளில் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் சிறு தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படாது. மேலும், அவர்களால் தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக முறையிட முடியும். ஆனால், புதிய கொள்கைகள் அவற்றை மொத்தமாக நீக்கக்கூடும்.. இதனால் விசா ரத்து செய்யப்பட்டாலும் அது குறித்து மேல்முறையீடு செய்யும் ஆப்ஷன் கூட இல்லாமல் அவர்கள் நாடுகடத்தப்படலாம்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+