ஆஹா.. இதை பாருங்க.. ஓங்கி அடித்த டிரம்ப்.. திரும்பி பார்த்த அமெரிக்கா.. சவால் விட்ட அனைவருமே காலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் இப்போது ஜோ பைடன் அதிபராக இருக்கும் நிலையில், அங்கே இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரம் இப்போதே ஆரம்பித்துவிட்டது.

Trump almost confirms his President candidate with South Carolina Republican Primary win


அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே அதிபர் வேட்பாளர் தேர்வே சுவாரசியமாக இருக்கும். அதாவது அங்கே பிரதான கட்சிகளாக இருப்பது குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தான்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: அங்கே இந்த இரு கட்சிகள் மட்டுமே முக்கிய கட்சிகளாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் பலர் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள்.அவர்களுக்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அதில் யாருக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவர்களே வென்றதாக அறிவிக்கப்படுவார்கள். இந்த உட்கட்சி தேர்தல் முறையே சில மாதங்கள் வரை நடக்கும்.

மேலும், அங்கே ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற விதி இருக்கிறது. இதனால் முதல்முறையாக அதிபராக இருக்கும் நபர் மீண்டும் போட்டியிட விரும்பினால் அவரே பெரும்பாலும் அதிபர் தேர்தலில் களமிறங்குவார். அதன்படியே இந்த முறை ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியானது.

தொட்ட இடமெல்லாம் சர்ச்சை.. ஆனாலும் டிரம்பிற்கு ஆதரவு குறையவே இல்லையே ஏன்! அமெரிக்கர்கள் மனநிலை என்ன


டிரம்ப்: அதேநேரம் குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தனர். டிரம்ப், நிக்கி ஹேலி, ரான் டிசாண்டிஸ், விவேக் ராமசாமி எனப் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். உட்கட்சி தேர்தலில் ஆதரவு கிடைக்காத நிலையில் ரான் டிசாண்டிஸ், விவேக் ராமசாமி ஆகியோர் ஏற்கனவே அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டனர். இதனால் டிரம்ப், நிக்கி ஹேலி இடையே மட்டும் போட்டி இருக்கிறது.

இருவருக்கும் இடையே பல்வேறு மாகாணங்களிலும் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி நேற்று தென் கரோலினாவில் குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தல் நடந்தது. டிரம்பின் சொந்த மாகாணமான தென் கரோலினாவில் நடந்த இந்தத் தேர்தலில் அவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட நிக்கி ஹேலியை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதில் டிரம்பிற்கு ஆதரவாக சுமார் 60% வாக்குகள் கிடைத்தது. நிக்கி ஹேலிவுக்கு ஆதரவாக 40% ஆதரவு மட்டுமே கிடைத்தது.

கிட்டதட்ட உறுதி: பெரும்பாலான மாகாணங்களில் டிரம்ப் வென்றுள்ள நிலையில், அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இன்னும் சில காலத்தில் குடியரசு கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டு அதில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே கடந்த 2016 (வெற்றி), 2020 (தோல்வி) அதிபர் தேர்தல்களில் டிரம்ப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனுக்கு இப்போது வயது 81 ஆகிறது. அதேபோல டிரம்பின் வயது 77 ஆகிறது. அமெரிக்காவில் இந்தளவுக்கு அதிக வயதான நபர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது அரிதிலும் அரிதாகவே நடக்கும். இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் டிரம்ப்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+