ஜி ஜின்பிங்கிடம் நான் பேசனும்! திடீரென போன் போட்ட டிரம்ப்.. மோதல் போக்குக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், திடீரென சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செல்போனில் பேசியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆகவே, இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவுக்கு உலக அரங்கில் பல்வேறு விவகாரங்களில் சீனா சவால் விடுத்து வரும் நிலையில், டிரம்ப் பதவியேற்றது முதல் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்த உறவு மேலும் மோசமானது.

trump-and-xi-speak-over-phone-in-key-call-amid-rising-tensions-report

டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதில் குறிப்பாக அவர் விதித்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை அமைந்தது. அமெரிக்கா விதித்த பரஸ்பர விதிக்கு சீனா பதிலடி கொடுத்ததால், அந்த நாட்டிற்கு எதிராக வரியுத்தத்தை டிரம்ப் தொடங்கினார். கிட்டத்தட்ட 240 சதவீதம் வரியை டிரம்ப் விதித்த நிலையில், பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்யை தொடர்ந்து பதிலுக்கு பதில் விதித்த வரியை 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆகவே, இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

சமீபத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கனிம வளங்கள் விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில், இரு தலைவர்களும் பேசியிருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் 12 ஆம் தேதி, அமெரிக்காவும், சீனாவும் 90 நாட்களுக்கு ஒரு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டன.

அப்போதிலிருந்து, வரிகளை திரும்பப் பெறுவது குறித்து இரு தரப்பும் பேசியிருந்தன. டிரம்ப் கேட்டுக்கொண்டதால்தான் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது என சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தொலைபேசி உரையாடலின் போது தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வெள்ளை மாளிகையும் இது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+