சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு முக்கிய பதவியை கொடுத்த டிரம்ப்.. யார் இவர்! பின்னணி என்ன
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் தனது நிர்வாகத்தின் முக்கிய துறைகளுக்குத் தலைவர்களை நியமித்து வருகிறார். இதற்கிடையே இப்போது வரும் வெள்ளை மாளிகையில் ஏஐ பிரிவுக்கான தலைமை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனை டிரம்ப் நியமித்து இருக்கிறார். இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், அடுத்த மாதம் தான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கிறார். இப்போது அவர் தனது நிர்வாகத்தில் முக்கிய துறைகளுக்குத் தலைவர்களை நியமித்து வருகிறார்.

டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலருக்கு முக்கிய பதவிகள் கிடைத்து வருகிறது. இதற்கிடையே டிரம்ப் மற்றொரு முக்கிய துறையின் தலைவராக இந்தியர் ஒருவரை நியமித்து இருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப்:
அதாவது ஏஐ துறைக்கான கொள்கை ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் பிரபல முதலீட்டாளரும் எழுத்தாளருமான இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார். இவர் எலான் மஸ்க் உடன் நெருக்கமான உறவைக் கொண்டு இருக்கிறார். எலான் மஸ்க் ஆதரவாளர்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் நிலையில், இப்போது ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கும் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கிறேன்" என்று அறிவித்தார். அத்தோடு வேறு சில பிரிவுகளுக்கும் நியமனங்களை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்:
1980களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீராம் கிருஷ்ணன்.. 1990களில் அவரது தந்தை கணினி ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதுவே ஸ்ரீராம் கிருஷ்ணனின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அப்போது இணைய வசதி இல்லை என்ற போதிலும், அவர் புத்தங்களைப் படித்து தினசரி கோடிங் பயிற்சி செய்வாராம். இதுவே அவரை கணினி நோக்கித் தள்ளி இருக்கிறது.
ஸ்ரீராம் கிருஷ்ணன் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் படித்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலில் வேலைக்குச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், விண்டோஸ் அஸூரில் பணியாற்றி இருக்கிறார். அப்போது தான் அவர் விண்டோஸ் அஸூர் புரோகிராமிங் என்ற புத்தகத்தையும் அவர் எழுதினார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் பின்னணி:
தொடர்ந்து 2013ம் ஆண்டு அவர் பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்தார். பேஸ்புக் செயலி மற்றும் விளம்பரம் சார்ந்த வருவாய் அதிகரிப்பது ஆகியவற்றில் ஸ்ரீராம் கிருஷ்ணன் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்கு வகித்துள்ளார். தொடர்ந்து ஸ்னாப் என்ற நிறுவனத்தில் சில காலம் வேலை செய்த அவர், 2019 முதல் ட்விட்டர் தளத்தில் வேலை செய்து வருகிறார். இடையில் சில காலம் யாகூ தளத்திலும் அவர் வேலை செய்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். அப்போது பலரையும் அவர் வேலையை விட்டு அனுப்பி இருந்தார். இருப்பினும், அப்போது தான் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது முதல் இருவரும் இணைந்து பணியாற்றி வரும் சூழலில் தான், இப்போது அவர் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஏஐ துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications