கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க ரெடியாகும் டிரம்ப்? மிக முக்கிய நடவடிக்கை! அடுத்து களமிறக்கப்படும் ராணுவம்?
வாஷிங்டன்: அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய கிரீன்லாந்து கட்டாயம் தேவை என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அத்தோடு நிற்காமல் தனது இப்போது கிரீன்லாந்து தொடர்பாக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்கு கிரீன்லாந்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது இஷ்டத்திற்குத் தடாலடி அறிவிப்புகளுக்குப் பெயர்போனவர். அவருடைய அறிவிப்புகளும் பேச்சுகளும் தொடர்ந்து சர்வதேச அளவில் பதற்றத்தையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தி வருகிறது. அப்படித் தான் டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டை வாங்கப் போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது அப்போதே பெரிய விவாதமாக மாறியிருந்தது.

சிறப்புத் தூதர்
இதற்கிடையே கிரீன்லாந்து முதல் சிறப்புத் தூதரை டிரம்ப் இப்போது நியமித்துள்ளார். டிரம்பின் "மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்" ஆதரவாளரான ஜெஃப் லாண்ட்ரி கிரீன்லாந்தின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரீன்லாந்து ஒரு நாடு இல்லை.. டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இதனால் முன்பு கிரீன்லாந்திற்கு எனத் தனியாகத் தூதரை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை. இருப்பினும், எப்படியாவது கிரீன்லாந்தைத் தன்வசப்படுத்த வேண்டும் என டிரம்ப் விரும்புவதாலேயே இந்தப் பதவியை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "கிரீன்லாந்து எங்களது தேசியப் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஜெஃப் புரிந்துகொள்கிறார். நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நலன்களை ஜெப் புரிந்து கொண்டுள்ளார். அமெரிக்கத் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்" என்றார்.
கிரீன்லாந்து
வட துருவத்திற்கு அருகே அமைந்துள்ள பிரம்மாண்ட நிலப்பரப்பான கிரீன்லாந்து இப்போது டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமாக இருக்கிறது. மிகக் குறைந்த மக்கள் தொகையே கிரீன்லாந்தில் இருந்தாலும் கூட அங்கு அதிகளவில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. மேலும், ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்கவும் கிரீன்லாந்து தேவை என டிரம்ப் கருதுகிறார். இதன் காரணமாகவே அவர், கிரீன்லாந்து மீது ஆர்வம் காட்டுகிறார். எப்படியாவது கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. அதற்கு முதல் நடவடிக்கையாகவே சிறப்புத் தூதர் நியமனத்தை நாம் பார்க்கலாம்.
டென்மார்க் எதிர்ப்பு
இதற்கிடையே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட அனைவரும் டென்மார்க் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். டிரம்பின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் இது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், டென்மார்க் இறையாண்மையை அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
ராணுவம்
இதற்கு முன்பே டிரம்பின் இந்த முயற்சிகளுக்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. இருந்த போதிலும் டிரம்ப் அதை ஏற்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து முக்கியம் என்ற அவர், இதற்குத் தேவையென்றால் ராணுவத்தை கூட பயன்படுத்துவோம் என்பது போலச் சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் சிறப்புத் தூதரையும் நியமித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கவனம் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.
-
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications