இது மட்டும் நடந்தால்.. மொத்த ஈரானும் காலி! டிரம்ப் சொன்ன மேட்டர்! பதற்றம் இன்னும் குறையல!
வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது தற்காலி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. இந்நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டுவர இரு நாட்டு தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இப்படி பேசி நிரந்தர அமைதி ஏற்பட்டாலும் கூட, ஈரான் தவறு செய்தால் நாங்கள் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என டிரம்ப் வாய் விட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் இருந்து மியாமிக்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுதான் இந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்.

அதாவது, ஒப்பந்தத்தின் சாராம்சம் என்ன என்று எனக்கு தெரிந்தாலும், அதில் உள்ள ஒவ்வொரு நிபந்தனைகளும் மிகத் துல்லியமாக எப்படி இருக்கிறது என்பதைத் தான் இன்னும் சரிபார்க்கவில்லை. அதற்காகக் காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஈரானுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்துத் தமக்கு விளக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது ஈரான் வழங்கியுள்ள புதிய முன்மொழிவின்படி, சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களை இப்போது செய்யாமல், பின்னர் தள்ளி வைக்கலாம் என்றும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவும் இப்போதைக்கு ஓகே சொல்லியிருப்பதால், பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் டிரம்ப் பேசியுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, ஈரான் சொன்ன விஷயத்தை தவிர வேறு ஏதாவது செய்தால், அந்த நாடு மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்களை நடத்தத் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
சாமியே இறங்கி வந்தாலும், பூசாரி வழி விடாத கதையாகத்தான் இருக்கிறது டிரம்பின் இந்த பேச்சு. ஹார்முஸ் என்பது எவ்ளவு முக்கியமான விஷயம். அதை ஓபன் செய்ய ஈரான் ஓகே சொன்னலும், டிரம்ப் பேசி எல்லாவற்றையும் கெடுத்துவிடுவார் போல இருக்கிறது.












Click it and Unblock the Notifications