11 வது முறையாக தாத்தாவானார் டொனால்ட் டிரம்ப்! பச்சிளம் குழந்தை முதல் 18 வயது பேத்தி வரை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 11 ஆவது முறையாக தாத்தாவானார். அவருடைய மகள் டிஃப்பானி டிரம்பிற்கு மகன் பிறந்துள்ளார். குழந்தை பிறந்த தகவலை வியாழக்கிழமை அன்று டிஃப்பானி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு மகன் பிறந்துள்ளான். அவருக்கு அலெக்சாண்டர் டிரம்ப் போலஸ் என பெயரிட்டுள்ளோம். உன்னை நாங்கள் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறோம். நீ எங்கள் வாழ்வில் வந்ததற்கு நன்றி! என தெரிவித்துள்ளார்.

தனது குழந்தையின் பாதங்களை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள். 31 வயதாகும் டிஃப்பானிக்கு இது முதல் குழந்தை. அவர் 27 வயதாகும் மைக்கேல் போலஸை கடந்த 2022 ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் தனது மகள் கர்ப்பமாக இருப்பதை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அவர் கூறுகையில், டிஃப்பானிக்கு குழந்தை பிறக்க போகிறது. நல்ல விஷயம் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
டிஃப்பானியின் தாயும் டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவியுமான மேப்லஸ், தனக்கு பேரன் பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்தார். அவர் தனது ட்விட்டரில் பேரன் பிறந்த மகிழ்ச்சியை விட இந்த உலகில் வேறு எதுவும் மகிழ்ச்சி இல்லை என்றும் மாப்பிள்ளை மைக்கேலுக்கும் மகள் டிஃப்பானிக்கும் வாழ்த்துகள். என் அன்பு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பிற்கு பச்சிளம் குழந்தை முதல் 18 வயது வரை பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்த பேரக் குழந்தைகள் டொனால்ட் ஜூனியர், இவங்கா, எரிக், டிஃப்பானி மூலம் கிடைத்தவர்களாவர். டொனால்ட் ஜூனியருக்கும் அவரது முதல் மனைவி வனிசாவுக்கும் 5 குழந்தைகள் உள்ளனர்.
கேய் மேடிசன் (18), டொனால்ட் ஜான் டிரம்ப் (16), டிரிஸ்டன் (13), ஸ்பென்சர் (12), சோலே (10) ஆகியோராவர். அது போல் இவாங்கா டிரம்பிற்கும் அவரது கணவர் ஜேரட் குஷ்னருக்கும் அரபெல்லா (13), ஜோசப் (11) மற்றும் தியோடோர் (9) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
மகன் எரிக் டிரம்ப் அவரது மனைவி லாராவுக்கு லூக் (7), கரோலினா (5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு குடியரசு கட்சி மாநாட்டில் பேத்தி கெய் பேசுகையில் என்னை பொருத்தவரை எனது தாத்தா எல்லோரையும் போல்தான். அவர் எங்களுக்கு சாக்லேட், சோடா உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்துள்ளார். நாங்கள் பள்ளியில் எப்படி படிக்கிறோம் என்பதையும் கேட்டறிவதில் அவர் ஆர்வம் காட்டுவார். நான் பள்ளியில் சிறந்த மாணவனாக விளங்கிய போது அதை அவருடைய நண்பர்களுக்கு பெருமையாக பகிர்ந்து கொண்டார்.
ஆனால் நிறைய மக்கள் என் தாத்தாவை கொடூரனாக பார்க்கிறார்கள். ஆனால் அவர் எங்களுக்கு எப்போதுமே முன்மாதிரியாக திகழ்கிறார். அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மீடியாக்களை அவரை வித்தியாசமான மனிதராகவே சித்தரிக்கிறார்கள். ஆனால் எங்களுக்குத்தான் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும் என கெய் தெரிவித்திருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications