நீதிமன்றம் குட்டு வைத்தும் அடங்காத டிரம்ப்.. 10% வரியை 15% உயர்த்தி அறிவிப்பு.. ஆட்டம் முடியப்போகுது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு போட்டிருந்த பரஸ்பர வரி என்பது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருந்தது. இந்நிலையில், மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப் உலக நாடுகள் அனைத்துக்கும் 10% வரியை அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வரியை தற்போது 15% ஆக உயர்த்தியுள்ளார்.
வரி விஷயம்தான் உலகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக ஹாட் டாப்பிக். வரி காரணமாக சர்வதேச அளவில் டாலர் மீதான மதிப்பு குறைய தொடங்கியது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய.. தங்கத்தின் ரேட் விண்ணை முட்டியது.

இந்தியாவும் அமெரிக்க வரிக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இந்த வரியை குறைக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தத்த போட்டது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாய சங்கங்களால் கடுமையாக எதிர்க்கப்படும் நிலையில், நேற்று இந்த வரி குறித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவை கொடுத்தது. அதாவது, டிரம்ப் போட்ட பரஸ்பர வரி என்பது சட்டவிரோம் என்றும், இந்த வரி இனி செல்லாது என்றும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகளுக்கு நிம்மதியை கொடுத்தாலும், டிரம்புக்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியிருந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த கையோடு, அமெரிக்காவின் மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி மொத்த நாடுகளுக்கும் 10% வரியை விதித்திருந்தார். இந்நிலையில் இந்த வரியானது தற்போது 15% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவை பொருத்தவரை ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிடுவதுதான் சட்டம்.
முன்னதாக பரஸ்பர வரியை சட்ட விரோதம் என்று கூறிய நீதிபதிகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த உத்தரவு மொத்த அமெரிக்காவுக்கும் எதிரானது என்றும், மிக மோசமாக எழுதப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சித்திருந்தார். இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றியிருந்த நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்த வரி தண்டனை வரியாகும் என்று கூறியிருந்தார்.
இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை பொறுத்தவரை, மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டிருந்தது. இதில் 25% வரியானது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்பதற்காக போடப்பட்டது. எனவே வேறு வழியின்றி இந்தியாவும் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தி விட்டது. எனவே மொத்த வரி 50லிரு்நது 18% ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வரி 10% ஆக குறைந்தது. இதை விரும்பாத டிரம்ப் 15% ஆக தற்போது வரியை ஏற்றியுள்ளார்.
இதற்கு அவர் பயன்படுத்தி சட்டம், அமெரிக்க அரசியலமைப்பு பிரிவு 122தான். இந்த சட்டத்தின் படி வரியை போட முடியும். ஆனால் அந்த வரி 150 நாட்களுக்கு மட்டும்தான் அமலில் இருக்கும். அதன் பின்னரும் வரி நீடிக்க வேண்டும் எனில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications