'அது' நல்லதுதான்... தைரியமா எடுத்துக்கொள்ளுங்கள்... ஒரு வழியாக பிடிவாதத்தைக் கைவிட்ட டிரம்ப்
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும் தனக்கு வாக்களித்தவர்களை அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலைமை மோசமாவதைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிட்டன் நாட்டைப் போல லாக்டனவுனை மீண்டும் அமல்படுத்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே தயாராக இல்லை.

100 நாள் 10 கோடி தடுப்பூசி
இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த அமெரிக்க அதிபர் பைடன் முயன்று வருகிறார். தான் பதவியேற்ற பின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்த அவர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

தடுப்பூசி வேண்டாம்
இருந்தாலும், அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தடுப்பூசியைப் பொதுமக்கள் செலுத்தக் கூடாது என்று தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த, அந்நாட்டிலுள்ள தலைவர்கள் மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை எடுத்து வருகின்றனர். இதுபோன்ற பிரசாரத்தை முன்னின்று நடத்துபவர்களில் பெரும்பாலானோர் டிரம்ப் ஆதரவாளர்கள்.

நான் பரிந்துரைக்கிறேன்
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து டிரம்ப் சமீபத்தில் பாக்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் நிறையப் பேருக்கு கொரோனா தடுப்பூசியைப் பரிந்துரைத்து உள்ளேன். எனக்கு வாக்களித்த பலரும் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால், அப்படியல்ல தடுப்பூசியை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்
இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. இவை சிறப்பான முறையில் கொரோனாவை கட்டுப்படுத்துகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பல மருந்து நிறுவனங்களுடன் இணைந்து நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே இந்தத் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர்" என்றார்.

முதல் முறை
மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த அந்நாட்டிலுள்ள பல்வேறு தலைவர்களும் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசிகளை எடுத்துவருகின்றனர். ஆனால், டிரம்ப் இதுபோல பொதுமக்கள் முன்னிலையில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவாகும் அவர் இப்படி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறையாகும்

டிரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற பிறகு எதிலும் பெரியளவில் டிரம்ப் கருத்து தெரிவிக்காமலேயே இருந்து வந்தார். இப்போது முதல்முறையாக கொரோனா தடுப்பூசி குறித்து அவர் பேசியுள்ளார். இதில் பைடன் நிர்வாகம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பட்டும் படாமலேயே பதிலளித்தார்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications