"ரூ.8,900 கோடி போச்சு.." டிரம்பிற்கு விழுந்த பேரிடி! கண்ணை மூடி திறப்பதற்குள் எல்லாம் காலி
வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி மதிப்பு தாறுமாறாகச் சரிந்து வருகிறது. சில நாட்களில் அதன் மதிப்பு வெகுவாகவே குறைந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்திற்கு இந்த பிட்காயின் சரிவால் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறதாம்.. டிரம்ப் குடும்பத்தின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.8900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகெங்கும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. உலகெங்கும் பல்வேறு தரப்பினரும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்தனர். குறிப்பாக இந்தாண்டு கிரிப்டோவுக்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்தது.

கிரிப்டோகரன்சி
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், கிரிப்டோ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அமெரிக்க அரசே கிரிப்டோ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் அதன் விலை தாறுமாறாக அதிகரித்தது. இதுவரை இல்லாத உச்சத்திற்குக் கூட பல்வேறு கிரிப்டோகரன்சகள் போனது. ஆனால், கடந்த சில நாட்களாக அதன் நிலைமை மொத்தமாக மாறியது. பிட்காயின் தொடங்கி எல்லா கிரிப்டோவும் சரிய ஆரம்பித்தது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பதற்றமடைந்தனர்.
பலரும் இந்த சரிவால் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கிடையே டிரம்பின் குடும்பத்திற்கு இந்த சரிவால் ஒரு பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.8900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் குடும்பத்தினர் மேற்கொண்ட ஆபத்தான கிரிப்டோ மற்றும் மீம்காயின் முதலீடுகள்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது..
கடும் சரிவு
செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் $7.7 பில்லியனாக இருந்த ட்ரம்ப் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு, இப்போது ஒரே மாதத்தில் $6.7 பில்லியனாக குறைந்துள்ளது. மீம்காயின்கள் மற்றும் ட்ரம்ப் முதலீடு செய்திருந்த கிரிப்டோ மதிப்பு சரிந்ததே இதற்கு முக்கிய காரணம் என அமெரிக்க செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் நியூஸ் சுட்டிக்காட்டுகிறது. கிரிப்டோ முதலீடுகளால் சுமார் ரூ.8900 கோடியை டிரம்ப் குடும்பம் இழந்துள்ளது.
அதிக நஷ்டம்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே "டிரம்ப் மீம் காயின்" என்ற தனது சொந்த கிரிப்டோவை வெளியிட்டார். இருப்பினும், அதன் மதிப்பு சமீபத்தில் சுமார் 25% வரை சரிந்தது. அதேபோல டிரம்பின் மகனான எரிக் ட்ரம்ப் பிட்காயின் மைனிங் செய்யும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். அதன் மதிப்பு உச்சத்திலிருந்து கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்துள்ளது. மேலும், டிரம்பின் மற்றொரு நிறுவனமான ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப், கிரிப்டோ நிதியை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அதன் பங்குகளும் கடுமையாகச் சரிந்துள்ளது.
தாறுமாறாகச் சரிந்த கிரிப்டோ
இவை எல்லாம் சேர்ந்தே டிரம்பின் குடும்பத்தின் சொத்து மதிப்பைச் சரிய வைத்துள்ளது. ட்ரம்ப் குடும்பத்தினர் தங்கள் கிரிப்டோ முயற்சிகளில் அதிக இழப்பைச் சந்தித்தது மட்டுமல்லாமல், ட்ரம்ப் பெயரில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க விரும்பியவர்களும் இதனால் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிரம்பின் பெயரில் ஜனவரி மாதம் மீம்காயின் ஒன்று வெளியிடப்பட்டது. அப்போது ஒரு மீம் காயின் 45 டாலர் வரை விற்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு மதிப்பு கடுமையாகச் சரிந்த நிலையில், இப்போது அது வெறும் 6 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் மனைவி மெலனியாவின் பிட்காயின் ஒரு காலத்தில் 8.4 டாலருக்கு வர்த்தகமானது. இப்போது அது 0.12 டாலருக்கு சரிந்துள்ளது.
-
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications