Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்கா எடுத்த ஒரே முடிவால் கதிகலங்கிய ஆப்கானிஸ்தான்.. பதற்றம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டுத் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இது அமெரிக்கா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது ஆப்கானை சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அனைத்து விசா விண்ணப்பங்களையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.

உலகிலேயே மிகவும் உச்சபட்ச பாதுகாப்பைக் கொண்ட பகுதிகளில் ஒன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அலுவலகமும் அதிகாரப்பூர்வ இல்லமும் இங்கு தான் இருக்கிறது. இதனால் எப்போதும் அங்குப் உச்சபட்ச பாதுகாப்பு இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக நேஷனல் கார்ட் எனப்படும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக அங்குப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

Trump Halts All Afghan Immigration in Major Crackdown after Afghan National Shoots National Guard

துப்பாக்கிச் சூடு

அப்படியிருக்கும்போது அங்கு திடீர் தாக்குதல் அரங்கேறியுள்ளது. வெள்ளை மாளிகை வடமேற்கு பகுதியில் பார்க் சதுக்கம் அருகே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது. அங்கிருந்த நேஷனல் கார்ட் வீரர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் ஆப்கானைச் சேர்ந்த 29 வயது ரஹ்மத்துல்லா லக்வாத் என்று அடையாம் காணப்பட்டுள்ளது.

என்ன நடந்தது!

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அங்கு வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களை நோக்கி இந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். முதலில் ஒரு பெண் வீரரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதல் குண்டு மார்பிலும், அடுத்த குண்டு தலையிலும் பாய்ந்துள்ளது. அந்த பெண் வீரர் சரிந்த நிலையில், அடுத்த வீரரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பிறகே மூன்றாவது வீரர், லக்வாத்தை சுட்டு பிடித்துள்ளார்.

விசா நிறுத்தம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட லக்வாத் ஆப்கானை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் விசா கோரிக்கைகளை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது. வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..

இது தொடர்பாக அமெரிக்கக் குடியேற்ற சேவை மையம் தனது ட்விட்டரில், "பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நெறிமுறைகளைக் கடுமையாக்கவுள்ளோம். அதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அனைத்து குடிவரவு கோரிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. எங்கள் தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மட்டுமே எங்கள் ஒரே நோக்கம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கள் சிவந்த டிரம்ப்

ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த ஒவ்வொரு நபரையும் ஆய்வு செய்யப்போவதாக டிரம்ப் கூறிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரஹ்மத்துல்லா லக்வாத் 2021ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, 'ஆபரேஷன் அல்லிஸ் வெல்கம்' திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்கு வந்துள்ளார். இவர் வாஷிங்டனின் பெல்லிங்ஹாம் பகுதியில் வசித்து வந்துள்ளார்..

மொத்தம் 4 முறை பாதுகாப்புப் படையை நோக்கி லக்வாத் சுட்டு இருக்கிறார். காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+