இந்தியாவிடம் சிக்கி செத்திருப்பார்.. பாக். பிரதமரை காப்பாற்றியதே நான்தான்! நாடாளுமன்றத்தில் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற ஸ்டேட் ஆஃப் தி யூனியனில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். இந்தியா பாகிஸ்தான் (Trump on India Pakistan war) உட்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகக் கூறிய டிரம்ப், தான் தலையிடவில்லை என்றால் 3.5 கோடி பாகிஸ்தான் மக்கள் இந்த மோதலில் உயிரிழந்திருப்பார்கள் என்றார். மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தான் நிறுத்தியதால் மட்டுமே பாகிஸ்தான் பிரதமர் உயிருடன் இருக்கிறார் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்றைய தினம் நாடாளுமன்ற ஸ்டேட் ஆஃப் தி யூனியனில் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியா- பாகிஸ்தான் அணுக்குண்டு போர் உட்பட எட்டு போர்களைத் தான் முடிவுக்குக் கொண்டுவந்ததாக மீண்டும் கூறினார். அத்துடன், அவர் அப்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டார்.

அதாவது இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையைத் தான் தடுத்து நிறுத்தியதால் தான் இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உயிருடன் இருப்பதாக டிரம்ப் கூறினார். தனது தலையீடு இல்லையெனில், கடந்த ஆண்டு 'ஆபரேஷன் சிந்துரின்' போது 3.5 கோடி மக்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஷெரீப் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அதிபராக எனது முதல் 10 மாதங்களில், நான் எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன்... பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுதப் போரில் ஈடுபட்டிருக்கும். எனது ஈடுபாடு இல்லையென்றால் பாகிஸ்தான் பிரதமர் கூறியது போல 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள்," என்று டிரம்ப் தன் உரையில் தெரிவித்தார். தனது பதவிக்காலச் சாதனைகளை விவரிக்கும்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஈரான், எகிப்து- எத்தியோப்பியா, செர்பியா- கொசோவோ, ருவாண்டா- காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆர்மீனியா- அஜர்பைஜான் மற்றும் கம்போடியா- தாய்லாந்து உள்ளிட்ட மோதல்களையும் தானே நிறுத்தி வைத்தாக டிரம்ப் தெரிவித்தார்.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்












Click it and Unblock the Notifications