நடுக்கடலில் கைதிகள்.. சுற்றிலும் சுறாக்கள்! உலகின் ஆபத்தான சிறையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட டிரம்ப்
வாஷிங்டன்: ஒரு காலத்தில் உலகின் மிகவும் ஆபத்தான கைதிகளை அடைக்கப் பயன்பட்ட சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் இந்தச் சிறை அமெரிக்கக் கடற்கரைகளில் அமைந்துள்ளது. சுற்றிலும் குளிர்ச்சியான நீர், அதி ஆபத்தான சுறாக்களைக் கொண்ட இந்தச் சிறை பல ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே இதை மீண்டும் திறக்கத் திடீரென டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போது என்ன உத்தரவைப் பிறப்பிப்பார் என்பதே தெரியாது. பல நேரங்களில் அவர் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை அசால்டாக பிறப்பித்துவிடுவார்.. இதற்கிடையே அதிபர் டிரம்ப் இப்போது புதிதாக ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிறையைத் திறக்க உத்தரவு
அதாவது 1963ல் மூடப்பட்ட ஒரு அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார். தற்போது இது சுற்றுலா தளமாக உள்ள நிலையில், மீண்டும் இது சிறையாக மாறவுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் கடினமான சிறைகளில் ஒன்றாக இருந்தது அல்காட்ராஸ் சிறை. இந்தச் சிறையைத் தான் மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்..
இனி நாட்டின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்தச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இன்று நான் நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் சிறைத் துறைக்கு உத்தரவிடுகிறார். அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்கவும் அதை விரிவுபடுத்தவும் உத்தரவிடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அல்காட்ராஸ் சிறை
அமெரிக்காவில் ஒரு காலத்தில் அதிகபட்சப் பாதுகாப்பு கொண்ட பெடரல் சிறை தான் அல்காட்ராஸ் சிறை. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கோட்டையாக இருந்த அல்காட்ராஸ், 1912இல் அமெரிக்க ராணுவ சிறையாக மாற்றப்பட்டது. பின்னர் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புகளும் அதிகரிக்கப்பட்டது. 1934 முதல் அது முக்கியமான பெடரல் சிறையாகச் செயல்படத் தொடங்கியது.
கடும் பாதுகாப்பு
மூன்று மாடிகளைக் கொண்ட இந்தச் சிறை, அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறையாகக் கருதப்பட்டது.. இதற்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன. முதலில் இதைத் தனியாக ஒரு தீவில் அமைந்துள்ளது. இதனால் அவ்வளவு ஈஸியாக கைதிகளால் தப்ப முடியாது. அப்படியே அதைத் தாண்டி கடலில் குதித்தாலும், குளிர்ச்சியான நீரும் வலுவான கடல் நீரோட்டமும் அவர்களைச் சிறிது தூரத்திற்கு மேல் செல்ல விடாது. அதை எல்லாம் சமாளித்தாலும் கூட அங்குள்ள சுறாக்கள் அவர்களைக் காலி செய்துவிடும். இதன் காரணமாகவே பாதுகாப்பான சிறையாக அலல்காட்ராஸ் சிறை கருதப்பட்டது.
இதில் பிரதானச் சிறை கட்டிடம் மூன்று தளங்களைக் கொண்டிருந்தது. அதில் நான்கு செல் பிளாக்குகள் இருக்கும். மேலும், வார்டன் அலுவலகம், விசிட்டிங் ரூம், ஒரு நூலகம் மற்றும் ஒரு சலூன் மட்டுமே அங்கு இருக்கும். அதில் மிகவும் ஆபத்தான கைதிகள் டி-பிளாக்கிற்கு அனுப்பப்பட்டனர். அந்தக் கடைசி ஆறு சிறை செல்களை தி ஹோல் என்று அழைத்தனர்.
தப்பவே முடியாது
1934ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்பட்டபோது, அதில் இரும்பு படிக்கட்டுகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன. உப்புக் காற்று மற்றும் நீர் அரிப்பைக் காரணமாகச் சிறை சுவர்கள் சேதமடைந்து இருந்த நிலையில், அவை வலுப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சிறைகளில் இருந்து எந்தவொரு கைதியும் தப்பித்துப் போக முடியாத சூழல் உருவாக்கப்பட்டது.
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளுக்கான கடைசி இடமாக அல்காட்ராஸ் சிறை இருந்தது. அமெரிக்க வரலாற்றில் அதிபயங்கரத் தீவிரவாதிகளாகக் கருதப்படும் ல்போன்ஸ் கபோன், ஜார்ஜ் "மெஷின் கன்" கெல்லி மற்றும் ராபர்ட் பிராங்க்ளின் ஸ்ட்ரூட் உள்ளிட்டோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிரம்ப் உத்தரவு
இருப்பினும், கடலில் அமைந்துள்ளதால் அதைப் பராமரிக்கவே பெரிய தொகை செலவானது. மேலும், பழைய கட்டிடம் என்பதால் சிறையின் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அல்காட்ராஸ் சிறை 1963ஆம் ஆண்டு மூடப்பட்டது. 1972ல் இந்தச் சிறை அமெரிக்கத் தேசியப் பூங்கா சர்வீஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிறகு அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்தச் சூழலில் தான் இதை மீண்டும் சிறையாக மாற்றி, அதைத் திறக்க டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications