சார் உங்கள பாக்க முடியுமா? தனிப்பட்ட முறையில் வந்து பேசிய மோடி.. புது குண்டை வீசிய ட்ரம்ப்
வாஷிங்டன்: பிரதமர் மோடி தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புது குண்டை வீசியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக கூறி வரும் டிரம்ப் தற்போது, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் நிலுவை தொடர்பாக தன்னை தனிப்பட்ட முறையில் மோடி தொடர்பு கொண்டு பேசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை சமீப காலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என வரியை காட்டி அடாவடி காட்டி வரும் நிலையில், தன்னை இந்திய பிரதமர் மோடி, சார்.. உங்களை பார்க்கலாமா? என தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஹெலிகாப்டர்கள் விவகாரம் தொடர்பாக பேசியதாக பரபரப்பை கிளப்பியுள்ளார் டிரம்ப்.

சார்.. உங்களை நான் சந்திக்க முடியுமா?
அமெரிக்காவில் ஜிஓபி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப் கூறியதாவது:- இந்தியா அபாச்சி ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்தது. ஆனால் 5 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை. மோடி என்னை சந்திக்க வந்தார். சார்.. தயவு செய்து உங்களை நான் சந்திக்க முடியுமா? என்று கேட்டார்.
நான் யெஸ் என்றேன். பிரதமர் மோடியுடன் எனக்கு வலுவான நட்புறவு உள்ளது. எனினும், வரி விதிப்பு விவகாரத்தில் மோடி என் மீது அதிருப்தியில் உள்ளார். அது உங்களுக்கே தெரியும். அவர்கள் (இந்தியா) தற்போது அதிக வரி செலுத்துகிறார்கள். எண்ணெய் வாங்குவதால் அந்த வரியை செலுத்துகிறார்கள். எனினும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கணிசமாக இந்தியா குறைத்துள்ளது.
நாம் இதனை மாற்றி வருகிறோம்
சொல்லப்போனால், வரி விதிப்பதால் நாம் பணக்காரர் ஆகி வருகிறோம். அனைவரும் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். வரி விதிப்பு காரணமாக விரைவில் நமது பொருளாதாரத்தில் 650 பில்லியன் டாலர்களை கொட்டப்போகிறோம் என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது" என்றார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய டிரம்ப், "அபாச்சி ரக ஹெலிகாப்டர்களுக்காக இந்தியா பல ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கிறது. அந்த பிரச்சினை தற்போது முன்னேறி வருகிறது. நாம் இதனை மாற்றி வருகிறோம். இந்தியா 68 ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்துள்ளது" என்றார். இந்த ஒப்பந்தம் குறித்து வேறு எதையும் விரிவாக டிரம்ப் பேசவில்லை.
இந்தியா உதவாவிட்டால் வரி விதிப்பு அதிகரிக்கும்
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பேசிய டிரம்ப், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் கூறுகையில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா தங்களுக்கு உதவும் விதமாக நடக்காவிட்டால் வரி விதிப்பை மேலும் அதிகப்படுத்துவோம்" என்றார்.
அதே நேரத்தில் பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப், இந்திய பிரதமர் மோடி நல்லவர். சிறந்த நபர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் அறிவார். என்னை மகிழ்ச்சியாக வைத்து இருப்பது ரொம்ப முக்கியம். அவர்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்கிறார்கள், எனவே அவர்கள் மீது விரைவாக வரிகளை உயர்த்த முடியும்" என்றார்.
4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது
உக்ரைன் - ரஷ்யா இடையே சுமார் 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறது. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடித்துக்கொண்டே வருகிறது ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில், கச்சா எண்ணெய் வாங்குகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து அதன்மூலம் ரஷ்ய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக இந்தியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதனால், இந்தியாவுக்கு எதிராக அதிக வரியை விதித்துள்ளது. தற்போது சுமார் 50 சதவீதம் வரி இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications