புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் டிரம்ப்.. 'தல' எங்க முடிவெட்டுனீங்க.. தெறிக்கும் மீம்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிதாக வைத்துள்ள சிகை அலங்காரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை வைத்து மீம்ஸ்களும் பரவி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எது செய்தாலும் மற்றவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் ஆழமாக நம்பக்கூடியவர். அதற்காக பல அதிரடியான கருத்துக்களையும் வெளிப்படுத்தக்கூடியவர். அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே இன்று அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்ததாகட்டும், வெளிநாட்டினர் வந்தால் சமுக வலைதள கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவாகட்டும், அவரது உத்தரவுகள் எல்லாமே நிச்சயம் உலக நாடுகளை மட்டுமல்ல அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

Trump reveals new hairstyle during surprise church visit in Virginia

சமீபத்தில் கூட ஈரான் மற்றும் சீனாவுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து அந்தநாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். இதெல்லாம் அதிகார ரீதியாக என்றால், அலங்கார ரீதியாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றவர்களை கவர்ந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று வெர்ஜினியாவில் உள்ள தேவாலயத்துக்கு சர்ப்ரைஸாக டிரம்ப் வருகை தந்தார். அப்போது அவரது சிகை அலங்காரம் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. தலைமுடிகள் மொத்தமும் சீவி பின்புறம் பங்க் வைத்து காணப்பட்டார்.

இதை பார்த்த அமெரிக்க புகைப்பட கலைஞர்கள் யார் இது நம்ம டிரம்பா என ஆச்சர்யப்பட்டதோடு, அப்படியே தாருமாறாக கிளிக் செய்த புகைப்படங்களை எடுத்தனர்.

அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதுமே பரவி வருகிறது. இதை வைத்து மீம்ஸ்களையும் அமெரிக்கர்கள் தெரிக்கவிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் சுற்றுப்பயணத்துக்கு தயாராகி உள்ள நிலையில் பிரிட்டன் மக்களும் டிரம்பின் ஹேர் ஸ்டைலை பார்த்து வியந்து போய் பதிவுகளை போட்டு வருகின்றனர். விளையாட்டு வீரரை போல் ஹேர் ஸ்டைல் வைத்திருப்பதாக டிரம்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+