போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா?
வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் இந்த வார இறுதியில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்ததே இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஈரானுடனான இந்த உடன்படிக்கை ஏற்பட்டால், உலகச் சந்தைக்கு ஈரானின் கச்சா எண்ணெய் வரத்து மீண்டும் தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக விநியோகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை
இன்று காலை நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) மற்றும் அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் ஆகிய இரண்டின் விலையும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த அரசியல் பதற்றம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் குறையும் என முதலீட்டாளர்கள் நம்புவதால், சந்தையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை சரிவு உலக நாடுகளின் எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு குறைவு?
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2% வரை சரிந்து, ஒரு பேரல் $88.79 டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையும் ஒரு பேரல் $86 டாலராகச் சரிந்துள்ளது. என்னதான் விலை தற்போது குறைந்திருந்தாலும், ஒப்பந்தம் கையெழுத்தானால்தான் நிலைமை நிரந்தரமாக மாறும்.
போர் நிறுத்த ஒப்பந்தம் விஷயத்தில் நெருங்கிவிட்டதாகக் ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு ஒப்பந்த வரைவுக்கும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் எதிரொலிக்குமா?
என்னதான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலிக்காது என்று சொல்லப்படுகிறது. இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL, HPCL ஆகியவை கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $95 டாலரைத் தாண்டிச் சென்றபோதும், உள்நாட்டில் சில்லறை விலையை பெரிய அளவில் உயர்த்தாமல் நுகர்வோரைப் பாதுகாத்தன.
ஏன் இந்தியாவில் விலை குறையாது?
தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட முந்தைய நஷ்டங்களை ஈடுகட்ட இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்துகின்றன. இதனால் உடனடியாக இந்த விலைக்குறைப்பு பலன் மக்களுக்கு போகாது.
அதேபோல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் டாலர் கணக்கில்தான் வாங்கப்படுகிறது. சமீபகாலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை டாலரில் குறைந்தாலும், இந்தியா அதை ரூபாயாக மாற்றும்போது அதன் இறக்குமதி செலவு எதிர்பார்த்த அளவு குறைவதில்லை. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று சொல்லப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications