அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்? ராஜினாமாவா! கிளப்பி விடும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத் துறை சம்பந்தமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், டிரம்ப் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டையும் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. டிரம்ப் ராஜினாமா செய்யப் போகிறாரா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் இந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்
பாதுகாப்புத் துறை சம்பந்தமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், டிரம்ப் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டையும் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. டிரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அது குறித்து டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
பேரக்குழந்தைகளுடன் விளையாடிய டிரம்ப்
79 வயதான அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை. டிரம்பின் கையில் காயங்களுடன் புகைப்படம் வெளியாகி விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தன. எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை விர்ஜீனியாவில் தனது பேரக்குழந்தைகளுடன் டிரம்ப் கோல்ஃப் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இருந்தபோதிலும் டிரம்பின் உடல்நலம் குறித்த வதந்திகள் ஓயவில்லை. இதற்கு மத்தியில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அளித்த பேட்டியில், "அதிபர் பதவி வகிக்க நான் தயார்" என்று கூறி கூடுதல் பரபரப்பை கிளப்பினார். இத்தகைய சூழலில்தான் டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
டிரம்ப் ராஜினாமா செய்யப் போகிறாரா?
உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதியை ஏற்படுத்த டிரம்பின் முயற்சிக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம், டிரம்பின் கொள்கைகளால் உள்நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று டிரம்ப் வெளியிடும் முக்கிய அறிவிப்பு என்னவென்பது பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. டிரம்ப் ராஜினாமா செய்யப் போகிறாரா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
டிரம்பின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு அண்மையில் வெள்ளை மாளிகை முற்றுப்புள்ளி வைத்தது.
டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என வெள்ளை மாளிகை கூறியது. எனினும், சமூக வலைத்தளங்களில் அமெரிக்கர்கள் பலரும் டிரம்ப் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications