ஜோ பிடன் மோசடி பேர்வழி.. குடும்பமே மோசடி குடும்பம்.. சிறையில் அடைக்கணும்.. டிரம்ப் தாறுமாறு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மோசடி பேர்வழி அவரை குடும்பத்துடன் சிறையில் அடைக்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக உள்ளது. பெரும்பாலான இந்தியர்களின் ஆதரவு ஜோ பிடனுக்கே உள்ளது. கருத்துக் கணிப்புகளிலும் அவரே வெல்வார் என கூறப்படுகிறது.

ஜார்ஜியா

ஜார்ஜியா

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட டிரம்ப், ஜோ பிடனுடன் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஜார்ஜியாவில் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அவர் கூறுகையில் வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன். எனது தோல்வியை உங்களால் கற்பனை செய்யமுடியுமா? ஒருவேளை நான் ஜோபிடனிடம் தோல்வி அடைந்துவிட்டால் அமெரிக்காவை விட்டே வெளியேறுவேன். அதுதான் நல்லது என கருதுகிறேன்.

மோசடி குடும்பம்

மோசடி குடும்பம்

ஜோ பிடன் குடும்பம் மோசடி குடும்பம் ஆகும். அவர்களை குடும்பத்துடன் சிறையில் அடைக்க வேண்டும் என்றார். அது போல் மிக்சிகனிலும் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். டிரம்பின் அதிரடி பேச்சு, பிரித்தாளும் தன்மை, இனவாதம் ஆகியவற்றால் புறநகர் பகுதிகளில் உள்ள அமெரிக்க பெண்கள் அதிருப்தியில் இருப்பதை டிரம்ப் அறிந்தார்.

வீடு கட்டும் திட்டம்

வீடு கட்டும் திட்டம்

இதையடுத்து அவர் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கினார். குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டம் உங்களுக்கு வேண்டுமா? நான் உங்கள் புறநகர்களை காப்பாற்றியுள்ளேன், உங்களையும் காப்பாற்றியுள்ளேன், எனவே நீங்கள் என்னை விரும்புவீர்கள் என நம்புகிறேன் என்றார் டிரம்ப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+