உலகத்தை 150 முறை தகர்க்கும் அளவுக்கு அணு குண்டுகள் வைத்து இருக்கிறோம்: டிரம்ப் பகிரங்க மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 33 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அணு ஆயுத சோதனை நடத்த டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவுடன் அணு ஆயுத போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில், டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், உலகத்தை 150 முறை தகர்க்கும் அளவிற்கு தங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பகிரங்கமாக பேசியுள்ளார்.

அமெரிக்கா- சீனா இடையே கடந்த சில தினங்களுக்கு வரி விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டு, இருநாடுகளுக்கும் இடையேயான வரி யுத்த பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய சூழலில், அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த டிரம்ப், சீனாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பேசியுள்ளார்.

trump-says-u-s-has-enough-nuclear-weapons-to-blowup-the-world-150-times

சீனா பற்றி டிரம்ப் பேச்சு

இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: நாங்கள் அவர்களுக்கு (சீனா) அச்சுறுத்தலாக உள்ளோம்.. அவர்கள் எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நீங்கள் சொல்லும் பல விஷயங்களை நாங்கள் அவர்களுக்குச் செய்கிறோம். இது போட்டி நிறைந்த உலகம், குறிப்பாக சீனா, அமெரிக்கா என்று வரும் போது கடுமையான போட்டி உள்ளது.

சீனாவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறோம்

அவர்களை நாங்கள் எப்போதுமே கண்காணித்து வருகிறோம். அவர்களும் எப்போதும் எங்களை கண்காணித்து வருகிறார்கள். அவர்களுடன் இணக்கமாக பழகுகிறோம் என்று நான் கருதுகிறேன். இதை மேலும் செய்ய நினைக்கிறேன். சீனாவுடன் போட்டியிட்டு துரத்துவதற்கு பதிலாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நாம் வலுவானவர்களாகவும் சிறந்தவர்களாகவும் இருக்க முடியும் என நினைக்கிறேன்" என்றார்.

மேலும் சீனாவின் அணு ஆயுதங்கள் குறித்து பேசிய டிரம்ப், சீனா மட்டுமல்ல பிற எந்த நாடுகளையும் விட அமெரிக்காவிடம்தான் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மிக தொலைவாகவும் மூன்றாவதாகவும் உள்ளது. ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வந்துவிடுவார்கள்.

உலகத்தை 150 முறை தகர்க்கும் அளவுக்கு

உங்களுக்கு தெரியுமா? சீன அசுரவேகத்தில் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் என இரு தலைவர்களிடமும் நான் அணு ஆயுத ஒழிப்பு பற்றி பேசினேன். அணு ஆயுத ஒழிப்பு என்பது மிகப்பெரிய விஷயம்.

உலகத்தை 150 முறை தகர்க்கும் அளவிற்கு போதுமான எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. ரஷ்யாவிடமும் அதிக அளவில் உள்ளன. சீனாவிடம் அதிக எண்ணிக்கையை கொண்டு வரும்" என்றார். அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த உத்தரவிட்டதை நியாயப்படுத்தி பேசிய டிரம்ப், சீனாவும், ரஷ்யாவும் அவர்களின் அணு ஆயுதங்களை சோதித்து வருகிறார்கள்" என்றார்.

33 ஆண்டுகள் கழித்து சோதனை

அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில், மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். கடைசியாக அமெரிக்கா கடந்த 1992-ம் ஆண்டு செப்​டம்​பர் 23-ம் தேதி அணு ஆயுத சோதனை நடத்தியது. பூமிக்​கடி​யில் 2,300 அடி ஆழத்​தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு 33 ஆண்டுகள் கழித்து தற்போது அணு ஆயுத சோதனை நடத்த போவதாக டிரம்ப் அறிவித்தது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனா, இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள்

2030-ம் ஆண்​டுக்​குள் அணு ஆயுதங்​களின் எண்​ணிக்​கையை 1,000 ஆக அதி​கரிக்க சீன ராணுவம் திட்​ட​மிட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். உலக அளவில் அதிக ஆணு ஆயுதங்கள் வைத்து இருக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்​கள் உள்​ளன. ரஷ்​யா​விடம் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் அணு ஆயுதங்​கள் உள்​ளன. சீனா​விடம் 550 அணு ஆயுதங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்​தி​யா​விடம் 180 அணு ஆயுதங்​கள் உள்​ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+