இந்தியாவுக்கு 19% இறக்குமதி வரி? அதிபர் டிரம்ப் சொன்ன மேட்டர் ரொம்ப முக்கியம்! நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கடந்த சில வாரங்களாகவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே இந்தியா உடனான ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். மேலும், வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியா மீதான இறக்குமதி வரி என்னவாக இருக்கும் என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிரம்ப்பின் இறக்குமதி வரியைத் தவிர்க்க அமெரிக்கா உடன் இப்போது உலகின் பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளனர். இந்தியா கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பாகத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அமெரிக்கா இந்தோனேசியா ஒப்பந்தம்
இதற்கிடையே இந்தியா உடனான ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது இந்தியச் சந்தைகளுக்கு ஈஸியான அணுகலை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்தார். இந்தோனேசியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்த நிலையில், அதன் பிறகு டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறினார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தோனேசியாவின் இறக்குமதி வரி 19%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்
இந்தோனேசியாவுடனான ஒப்பந்தம் போன்ற ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யவே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளோம். அந்த நாட்டின் அதிபருடன் இது குறித்து நான் பேசினேன்.. அதன் பிறகு நாங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தோனேசியாவுக்கு அதன் மார்கெட்டிற்கு முழு அணுகலைக் கொடுத்துள்ளது.
காப்பரில் இந்தோனேசியா வலுவானது, ஆனால் இப்போது எங்களுக்கு இந்தோனேசியா சந்தைக்கு முழு அணுகல் கிடைத்துள்ளது.. நாங்கள் எந்த வரியும் செலுத்த மாட்டோம். இந்தோனேசியா மார்கெட்டை அணுக அனுமதிக்கிறார்கள்.. இதற்கு முன்பு இந்தோனேசியா மார்கெட்டை நம்மால் அணுக முடியாத சூழல் இருந்தது. பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது.
இந்தியா உடனான ஒப்பந்தம்
இந்தியா உடனும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யவே விரும்புகிறோம். இந்திய மார்கெட்டிற்கு அணுகல் கிடைக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தனை காலம் இந்த நாடுகளில் எதற்கும் நமக்கு அணுகல் இல்லாமல் இருந்தது. அமெரிக்க நிறுவனங்களால் உள்ளே செல்ல முடியாமல் இருந்தது. இப்போது எனது வரி அறிவிப்பால் நிலைமை மாற ஆரம்பித்துள்ளது." என்றார்.
அமெரிக்கா உடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவின் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் குழு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்காகப் பல வாரங்களாக அமெரிக்காவில் தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பியூஷ் கோயல்
இதற்கிடையில், இந்தியா- அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பரஸ்பர ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இரு தரப்பிற்கும் வெற்றியைத் தரும் ஒரு உடன்படிக்கையை விரைவில் இறுதி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் உலக நாடுகளுக்கு டிரம்ப் இறக்குமதி வரிகளை அறிவித்திருந்தார். அப்போது இந்தியாவுக்கு 26% வரி அறிவிக்கப்பட்டது. இப்போது வர்த்தக உடன்படிக்கைக்குப் பிறகு அந்த வரி 20%க்கு கீழ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா இந்தியா பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் முதலே பல்வேறு நாடுகளுக்கும் வரி தொடர்பான கடிதங்களை டிரம்ப் அனுப்பியுள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகள் வரி கடிதம் பெற்றுள்ளன. அதேநேரம் இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை நடப்பதால் வரி குறித்த எந்தவொரு கடிதமும் இந்தியாவுக்கு வரவில்லை.
-
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா











Click it and Unblock the Notifications