டார்கெட் கமேனி.. உடனே உள்ளே வந்த டிரம்ப்! இஸ்ரேலுக்கு அதிரடியாக போட்ட ஆர்டர்.. அதிகரிக்கும் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் இடையே மீண்டும் இப்போது பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தேவைப்பட்டால் ஈரான் தலைவர் கமேனியை கொல்லவும் ரெடியாக இருப்பதாக இஸ்ரேல் அதிகாரி கூறியது பரபரப்பைக் கிளப்பியது. இருப்பினும், அரசியல் தலைமையைக் குறிவைக்கக் கூடாது என டிரம்ப் தடுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேல் ஈரான் நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பட மறுத்ததே இந்த தாக்குதலுக்குக் காரணமாகும். இப்போது இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது.

Trump Vetoed Israel s Plan against Iran s Supreme Leader Khamenei

டார்கெட் கமேனி?

இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவரான கமேனியை கொல்லவும் கூட இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது. அமெரிக்கா ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த இஸ்ரேல் உயர் அதிகாரி ஒருவர், ஈரானின் உயர்மட்ட தலைவர் கொல்லப்படுவது என்பது லிமிட்டில் இல்லாத விஷயம் எல்லாம் இல்லை எனக் கூறினார். அதாவது தேவைப்பட்டால் ஈரான் தலைவர் கமேனியை கொல்லவும் ரெடியாக இருக்கிறோம் என்பதே அதன் பொருள்.

நிராகரித்த டிரம்ப்

இஸ்ரேல் அதிகாரி ஒருவர் இதுபோல பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக இரு வெள்ளை மாளிகை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஈரான் இதுவரை எந்தவொரு அமெரிக்கரையும் கொல்லவில்லை.. அவர்கள் அமெரிக்கர்களைக் குறிவைக்காத வரை அரசியல் தலைமையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து யோசிக்கக் கூட மாட்டோம்" என்று தெரிவித்தார். அதாவது அமெரிக்காவின் சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாத வரை கமேனி மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளாது.

நெதன்யாகு

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நடக்காத ஆலோசனைகள் குறித்தெல்லாம் நிறையத் தவறான தகவல்கள் வந்துள்ளன. எனவே அது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம். அமெரிக்காவுக்கு எது நல்லது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்" என்றார்.

ஈரான் அணு ஆயுத திட்டத்தை நிறுத்த இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் கமேனி விவகாரத்தில் தனது முடிவை டிரம்ப் நேரடியாக இஸ்ரேலிடம் தெரிவித்தாரா இல்லை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆட்சி மாற்றம்?

முன்னதாக அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்திக்கு நெதன்யாகு அளித்த ஒரு பேட்டியில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காரணமாக ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று தெரிவித்தார். மேலும் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு டிரம்ப்பிடம் தெரிவித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தினார். மத்திய கிழக்கில் நொடிக்கு நொடி அதிகரிக்கும் பதற்றத்தால் நிலைமை மோசமாகி வருகிறது. இதனால் அந்த பிராந்தியம் மட்டுமின்றி உலகெங்கும் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+