சின்ன சின்ன ஆசை.. அழகான பெண்களை முத்தமிட ஆசை.. கொரோனா நெகட்டிவ்வானதும் டிரம்புக்கு குசும்புதான்!
வாஷிங்டன்: அழகான பெண்களை முத்தமிட ஆசையாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "அதிர்ச்சி" தகவலை தெரிவித்துள்ளார்.
டிரம்ப் எப்போதும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஒரு அதிபர். கொரோனா வைரஸை சீன வைரஸ் என பேசினார். அது போல் கருப்பின இளைஞர் பிளாய்டு கொலை செய்யப்பட்டபோது ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சுட்டுத் தள்ள உத்தரவிடுவேன் என்றார்.
இது போல் அவர் பேசியது ஏராளம். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக டிரம்பும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடனும் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதிபரின் ஆலோசகர்
இந்த நிலையில் அதிபரின் ஆலோசகர் ஹோப்ஹிக்ஸிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். இந்த நிலையில் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை
இதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு திங்கள்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் எடுக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

பிரசார பேரணி
இதையடுத்து அவர் பிரசாரத்தில் முழு வீச்சில் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டா சான்போர்டு சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்தார் டிரம்ப். பின்னர் சான்போர்டில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.

முத்தமிடுவேன்
அப்போது அவர் கூறுகையில் இன்று முதல் 22 நாட்களில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற இருக்கிறோம். வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறோம். பார்வையாளர்கள் கூட்டத்தில் போய் அங்கு இருக்கும் அழகான பெண்களை முத்தமிடுவேன். ஆண்களையும் விட மாட்டேன்.

டிரம்ப் பிரசாரம்
நான் ஒன்றும் வயதானவர் இல்லை. நான் இளமையானவன். நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன் என்றும் டிரம்ப் கூறினார். இவ்வாறு டிரம்ப் பேசிய பேச்சு வைரலாகி பெரும் சர்ச்சையாகிவிட்டது. பென்சில்வேனியா, அயோவா, வடக்கு கரோலினா மற்றும் விஸ்கான்சின் பகுதிகளில் நடைபெற இருக்கிற நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் கலந்து கொள்ளவுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications