உலக போரை இழுத்துவிடும் டிரம்ப்? ஐரோப்பிய நாடுகளுக்கு தந்த வார்னிங்.. 'நேட்டோ' பற்றி சர்ச்சை கருத்து
வாஷிங்டன்: உலகின் எல்லா நாடுகளையும் மிரட்டுவதையே டிரம்ப் வாடிக்கையாக வைத்திருக்கிறார். தான் நினைப்பது நடக்கவில்லை என்றால் டிரம்ப் மிரட்ட ஆரம்பித்துவிடுவார். இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ அமைப்பு உதவ வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த அமைப்புக்கே ஆபத்து ஏற்படும் எனச் சொல்லி டிரம்ப் மிரட்டியுள்ளார்.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் 3வது வாரமாகத் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தும் சூழலில், இப்போதைக்குப் போர் முடிவதாகத் தெரியவில்லை. மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்திற்குப் போகும் நிலையில், இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

டிரம்ப்
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அங்கு எந்த கப்பல் வந்தாலும் தாக்கி அழிப்போம் என ஈரான் மிரட்டியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வலியை உலக நாடுகள் ஏற்கனவே உணர ஆரம்பித்துவிட்டது. இதனால் அமெரிக்காவுக்கும் பிரஷர் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியது.
இதற்காக நேட்டோ நாடுகளிடம் டிரம்ப் உதவி கேட்டார். நேட்டோ நாடுகள் தங்கள் படைகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்ப வேண்டும்.. அங்குள்ள கப்பல்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், நேட்டோ நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடத் தயாராக இல்லை. இதனால் கோபமடைந்துள்ள டிரம்ப், இப்போது நேட்டோ நாடுகளையே மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.
நேட்டோவுக்கு மிரட்டல்
ஹார்முஸ் ஜலந்சந்தியை மீண்டும் திறக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், நேட்டோ அமைப்புக்கே மிகவும் மோசமான எதிர்காலம் தான் இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கிய கடல்வழி அடைப்புப் புள்ளியைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியை எடுக்க வேண்டும்.
இந்த ஜலசந்தி மூலம் லாபமடையும் நாடுகள், அங்கே எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த உதவ வேண்டும். எந்தவொரு பதிலும் இல்லையென்றாலோ அல்லது எதிர்மறையான பதில் கிடைத்தாலோ, அது நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவைப் போலல்லாமல், ஐரோப்பாவும் சீனாவும் வளைகுடாப் பகுதி எண்ணெய்யைச் சார்ந்துள்ளன. எனவே அவர்கள் உதவ வேண்டும்" என்றார்.
நேட்டோ
நேட்டோ என்பது கூட்டுப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 31 நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பாகும். இதன் விதிகளின் கீழ் ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பினர்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இதுவே நேட்டோவின் மிக முக்கியமான விதியாகும். நேட்டோவின் மிகச் சக்திவாய்ந்த உறுப்பினராக அமெரிக்கா உள்ளது. அப்படியிருக்கும்போது டிரம்ப்பே இதுபோல பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டிரம்ப் மேலும், "நமக்கு நேட்டோ என்றொரு அமைப்பு இருக்கிறது. உக்ரைனுக்கு நாம் உதவ வேண்டிய அவசியமில்லை. உக்ரைன் நமக்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்குத் தொலைவில் இருக்கிறது... ஆனால் நாம் அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் (நேட்டோ) நமக்கு உதவுவார்களா என்று பார்ப்போம். நான் நீண்ட காலமாகவே, நாம் அவர்களுக்குத் துணையாக இருப்போம்.. ஆனால் அவர்கள் (நேட்டோ) நமக்குத் துணையாக இருக்க மாட்டார்கள் என்று கூறி வருகிறேன். இப்போது உலகிற்கே தெரிந்துவிடும்" என்றார்.
சீனா விவகாரம்
மேலும், இந்த மாதம் பிற்பகுதியில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளார். ஹார்முஸ் விவகாரத்தில் சீனா தலையிட்டு உதவலில்லை என்றால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படலாம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.. வளைகுடா பகுதி எண்ணெய் இறக்குமதியையே முழுமையாகச் சார்ந்துள்ள சீனா, இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
-
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
டிரம்ப்பால் ஈரானுக்கு சுக்கிர திசை.. தினமும் எண்ணெய் வருமானம் இவ்வளவா... குவைத், சவுதிக்கே ட்விஸ்ட் -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications