“விளைவுகள் மோசமாக இருக்கும்!” ஆப்கன் விவகாரத்தில்.. தாலிபான்களுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை எங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தாலிபான்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா என்கிற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. அதன் தலைவரான ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்தார். அவரை, கண்டுபிடித்து அழிக்க அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன.

இப்படி நுழைந்த படைகள் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் ஆப்கானிஸ்தானில் இருந்தன. அமெரிக்க படைகள் செயல்பட பாக்ராம் விமானப்படை தளம் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதாவது, இந்த விமானப்படை தளத்தை முதலில் சோவியத் ரஷ்யாதான் கட்டியது. ஆனால் அதை அமெரிக்கா பின்னர் தங்களுக்கு ஏற்ப விரிவாக்கம் செய்துக்கொண்டது. இதிலிருந்துதான் அமெரிக்க படைகள் இயங்கின. பின்லேடன் ஒழிக்கப்பட்ட பிறகு, நீண்ட காலம் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அமெரிக்க படைகள், செலவுக்கு பயந்து அங்கிருந்து 2021 ஆம் ஆண்டு வெளியேறின.
இப்போது மத்திய கிழக்கில் ஈரான் புதிய சக்தியாக உருவாகியிருக்கிறது. இதனை சமாளிக்க புதிய ராணுவ தளம் தேவை. அது ஆப்கானிஸ்தானில் இருந்தால் வசதியாக இருக்கும் என்பது டிரம்பின் கணக்கு. எனவே மீண்டும் பாக்ராம் விமானப்படை தளம் வேண்டும் என்று ஆப்கானிடம் டிரம்ப் கேட்டுள்ளார். அதற்கு ஆப்கான் அரசு ஒப்புக்கொள்ளவில்லை. ஆப்கான் தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தாலிபான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஜாகீர் ஜலால், அமெரிக்காவின் கோரிக்கை குறித்து கூறுகையில், "பாக்ராம் தளத்தை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையே டோஹா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. ஆனால் ஒப்பந்தத்தில் பாக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைத்தான் தாலிபான்கள் தற்போது நினைவு கூறி வருகின்றனர்.
தாலிபான்களின் மறுப்பை ஏற்காத டிரம்ப், பாக்ராம் விமானப்படை தளம் அமெரிக்காவால் கட்டப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி, அதைத் திருப்பித் தரவில்லை என்றால் மோசமான விஷயங்கள் நடக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலிருந்து ஒரு மணிநேர தூரத்தில் பாக்ராம் விமானப்படை தளம் அமைந்துள்ளது. எனவே நாங்கள் இதை கேட்பது ஆப்கானிஸ்தானுக்காக அல்ல, மாறாக சீனாவுக்காகத்தான் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications