Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவையே ஆபத்தில் தள்ளும் டிரம்ப்? வேக்சினால் ஆபத்து என்றவருக்கு சுகாதார துறை! எழுந்த விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரா தேர்வாகியுள்ள டிரம்ப் தனது நிர்வாகத்தில் சுகாதாரத் துறைக்குத் தலைமையேற்க ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை தேர்வு செய்துள்ளார். வேக்சினுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை சுகாதாரத் துறைக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதை அங்குப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அடுத்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்க இருக்கிறார். இதற்காக அவர் தனது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

donald trump america vaccine

டிரம்ப்: இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆட்சியில் சுகாதாரத் துறைக்குத் தலைமையேற்க ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை தேர்வு செய்துள்ளார். தடுப்பூசிகளை மிகத் தீவிரமாக எதிர்க்கும் நபராக அறியப்படும் ராபர்ட் கென்னடி ஜூனியரை சுகாதாரத் துறைக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ளது மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த நியமனம் தொடர்பாக கென்னடியிடம் டிரம்ப் கூறுகையில், "நீங்கள் நீண்ட காலமாக ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.. எங்களுடன் வந்து அதைச் செய்யுங்கள். நீங்கள் நம்பமுடியாத விஷயங்களைச் செய்யப் போகிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சுகாதாரத் துறை: அமெரிக்காவில் மிக முக்கியமான துறையாகச் சுகாதாரத் துறை இருக்கிறது. அங்கு மருத்துவச் செலவுகளை மிடில் கிளாஸ் மக்களால் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு உச்சத்திற்குச் சென்றுவிட்டதாகப் புகார் இருக்கிறது. இன்சூரன்ஸ் தொகையைக் கூட மக்கள் பலரால் கட்ட முடியாத நிலையே இருக்கும் சூழலில், அந்தத் துறைக்குத் தலைமையேற்க கென்னடி ஜூனியர் பெயரை டிக் செய்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் கென்னடி ஜூனியர் இந்த பதவியை ஏற்பார்.

இந்த ராபர்ட் கென்னடி ஜூனியர் வேறு யாரும் இல்லை.. 1961 முதல் 1963 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடியின் சகோதரன் மகன் ஆவார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி, குறிப்பாக நீர்வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதொடர்ந்து வலியுறுத்தி வருபவர். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு எதிராகச் சுற்றுச்சூழல் சார்ந்து பல வழக்குகளை நடத்தியவர் ஆவர்.

"அடுத்த முறையும் அதிபர்.." அமெரிக்க சட்டத்தை மாற்றி எழுத போகும் டிரம்ப்? சொந்த கட்சியினருக்கே ஷாக்


வேக்சினுக்கு எதிரி: அதேநேரம் ராபர்ட் எஃப் கென்னடி வேக்சினுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவர். வேக்சின் காரணமாகவே ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுவதாக அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆட்டிசத்திற்கும் வேக்சினுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதைப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இருப்பினும், ராபர்ட் எஃப் கென்னடி தொடர்ந்து இதையே திரும்பத் திரும்ப கூறி வருகிறார். கொரோனா பரவல் சமயத்திலும் கூட கொரோனா வேக்சின்களை போட வேண்டாம் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்: அமெரிக்காவில் ஏற்கனவே வேக்சின் போட மாட்டோம்.. வேக்சின் மூலம் உடலில் சிப் பொருத்திக் கண்காணிக்கிறார்கள் என்றெல்லாம் ஆதாரமில்லாத பேச்சுக்கள் கிளம்பியுள்ள நிலையில், ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை சுகாதார துறைக்கு டிரம்ப் தேர்வு செய்ததைப் பலரும் சாடி வருகிறார்கள். அவருக்குப் பதிலாக வேறு நபரைத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் டிரம்ப் கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதால் இவரது நியமனம் எளிதாக நிறைவேறும் என்றே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+