சர்வதேச அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்.. பயனர்கள் அதிர்ச்சி.. என்னாச்சு
வாஷிங்டன்: பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் இன்று மாலை சர்வதேச அளவில் திடீரென முடங்கியது. இதனால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று ட்விட்டர். டிவிட்டர் சமூக வலைத்தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு ட்விட்டரில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக புளு டிக் வசதி பெற கட்டணம் என பல அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வந்தார். தொடர்ந்து பல அப்டேட்களை ட்விட்டர் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், ட்விட்டர் சர்வதேச அளவில் முடங்கியது. மாலை 6 மணியில் இருந்து ட்விட்டரில் பிரவுஸ் செய்தவர்களுக்கு உரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லாமல் இருந்தது. பலரும் தங்கள் இணைய இணைப்புதான் சரியில்லையே என்று கூட எண்ணினர். ஆனால் உலகம் முழுவதும் ட்விடர் நிறுவனம் முடங்கியிருப்பதாக பிறகுதான் தெரியவந்தது. உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். டிவிட்டர் நிறுவனம் தரப்பில் இதற்கான காரணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு இது போன்ற ட்விட்டர் முடங்கியது இது மூன்றாவது முறையாகும். தற்போது ட்விட்டர் சீராகி வழக்கம் போல் இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications