ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யக்காரினோ..எலான் மஸ்க் அறிவிப்பு..அவர் கவனம் செலுத்தும் பணிகள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகியிருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு கையகப்படுத்தினார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.6 லட்சம் கோடிக்கு ட்விட்டரை வாங்கியிருந்தார். ட்விட்டரின் சி இ ஓவாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வாலையும் பணியில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Twitters New CEO Linda Yaccarino, Elon Musk Announces - What Hes Focused On

ட்விட்டரில் அவர் பணியை தொடங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கினார். ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த பலரையும் பணியில் இருந்து நீக்கினார். அதாவது ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதோடு, பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு... ட்விட்டர் திவால் நிலைக்கு சென்று விடும் இதனால், வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். அதன்படி, ட்விட்டர் புளு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என சில பிரதேயக கணக்குகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த புளு டிக் வசதியை அனைவருக்கும் கொடுக்கப்போவதாக அறிவித்த எலான் மஸ்க். இதற்காக பணம் கட்டினால் போதும் என்ற வசதியை அறிமுகம் செய்தார். அதாவது, மாதம் 8 டாலர் செலுத்தினால் அனைவருக்கும் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என அறிவித்தார்.

இப்படி ட்விட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்த எலான் மஸ்க், தடலாடியாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து இருப்பதாகவும் 6 வாரங்களில் அவர் தனது பணியை தொடங்குவார் என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பெயரையும் எலான் மஸ்க் அறிவித்தார். பிரபல ஊடக நிறுவனமான NBCUniversal-இன் முன்னாள் விளம்பர தலைவராக இருந்த லிண்டா யக்காரினோ ட்விட்டரின் புதிய சி இ ஓவாக நியமிக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.

லிண்டா யக்காரினோ ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பரம், வணிக செயல்பாடுகளில் கவனம் செலுத்துவார் என்றும் ட்விட்டரின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் தான் கவனம் செலுத்துவேன் என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+