அமெரிக்காவில் உச்சம்... ஒரே நாளில் 1,19,348, பிரான்ஸில் 86,852 பேருக்கு கொரோனா பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் மட்டும் 1,19,348 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்சில் புதியதாக 86,852 கொரோனா உறுதியாகி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,02,41,879 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,55,615 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,55,40,868 ஆகும்.
உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு தொடருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,19,348 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,77,934 ஆக அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவில் உச்சம்
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 1,021 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,43,247 ஆக உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து பிரான்ஸ்
பிரான்ஸில் ஒருநாளில் 86,852 பேருக்கு கொரோனா உறுதியானது. இங்கு 24 மணிநேரத்தில் 304 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,48,705. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 40,169.

இந்தியா நிலவரம்
ஒருநாள் கொரோனா பாதிப்பில் 3-வதாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 46,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,07,203 ஆக உயர்ந்தது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 557 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,26,162.

இத்தாலி, இங்கிலாந்து
இத்தாலியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,811 ஆக உள்ளது. இத்தாலியில் ஒருநாளில் 425 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 24,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதேபோல் ஒரே நாளில் 413 பேர் கொரோனாவுக்கு இங்கிலாந்தில் பலியாகி உள்ளனர்.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications