டிரம்புக்கு விழும் அடி.. அமெரிக்கா டிமாண்ட்டை ஏற்காத ஐக்கிய அரபு எமிரேட்ஸ்! சவுதி பாணியில் பதிலடி
வாஷிங்டன்: காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மார்கோ ரூபியோவிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதால் அமெரிக்காவுக்கு இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - காசா இடையே 15 மாதங்களாக போர் நடந்தது. இப்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் - காசா இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானது தான். எப்போது வேண்டுமானாலும் இந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம்.

இதற்கிடையே தான் அமெரிக்கா இந்த போரை நிறுத்த முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த 4ம் தேதி அமெரிக்கா வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்குயா மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினர்.
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நல்ல நட்பு உள்ளது. அதேபோல் காசா மீதான போர் நடவடிக்கைக்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா சப்போர்ட் செய்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப்,‛‛காசா முனையில் நரகத்தின் படுகுழியில் பாலஸ்தீன் மக்கள் வசிக்கின்றனர். 100 ஆண்டாக நடக்கும் அதே சண்டை மீண்டும் நடக்கும். மக்கள் கொத்து கொத்தாக இறப்பார்கள்.
இதனால் காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போகிறது. அது இனி அமெரிக்காவுக்கு தான் சொந்தம்.போர் பூமியில் குவிந்து கிடக்கும் குண்டுகள், வெடிமருந்துகள் உட்பட எல்லாவிதமான ஆயுதங்களையும் அப்புறப்படுத்துவோம். கட்டட கழிவுகளை அகற்றி காசாவை சமப்படுத்துவோம். வீட்டு வசதிகள் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்'' என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி பாலஸ்தீனியர்கள் காசாவை காலி செய்ய வேண்டும். அவர்களை பக்கத்து நாடுகள் எகிப்து, ஜோர்டான் ஆகியவை கனிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்றார். இதற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காசாவை அமெரிக்கா கைப்பற்றக்கூடாது. காசா என்பது பாலஸ்தீனத்தின் ஒரு அங்கம். அங்கிருந்து மக்களை வெளியேற்றவே கூடாது என்று இஸ்லாமிய நாடுகள் கூறியுள்ளன. எகிப்தும், ஜோர்டானும் காசா மக்களை ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளன.
இந்நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்து பேசினார். காசா விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை மார்கோ ரூபியோ சந்தித்து பேசி வருகிறார். அதன் ஒருபகுதியாக இந்த சந்திப்பு என்பது நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது காசாவை மேம்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா முன்னெடுக்கும் திட்டம் பற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானிடம் எடுத்து கூறப்பட்டது. அதனை கேட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அமெரிக்காவின் திட்டத்துக்கு உடன்படவில்லை.
இதுதொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு செய்தி நிறுவனமான ‛வாம்' வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தான் அமெரிக்காவின் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யா நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ‛‛காசாவில் இருந்து மக்களை இடமாற்றம் என்பதை நான் விரும்பவில்லை. காசா மறுகட்டமைப்பு திட்டம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன மக்கள் இடையே வரும் நாட்களில் பிரச்சனை வராமல் நீண்ட அமைதி நிலவ வழிவகுக்க வேண்டும்'' என்று அமெரிக்காவிடம் இதுதொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
காசா விவகாரம் தொடர்பாக இன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் எகிப்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுடன் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் உச்சிமாநாட்டை நடத்துகின்றன. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய நாடாக உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்த உச்சி மாநாட்டில் காசாவில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் விரும்பாமல், மக்களை வெளியேற்றாமல் காசாவை மேம்படுத்தி கொடுக்க அமெரிக்காவுக்கு கோரிக்கை வைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications