ச்ச்சீ! "பலாத்காரமே அவர்களுக்கு ஆயுதம்!" சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை.. பகீர் கிளப்பும் உக்ரைன்
வாஷிங்டன்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் குறித்து சில பகீர் குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன் வைத்துள்ளது.
கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. அதன்படி உக்ரைன் பகுதியின் வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதலை ஆரம்பித்தது.
ஒரு மாதத்தைக் கடந்தும் இந்தப் போர் தொடரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உக்ரைனில் இருந்து பல ஆயிரம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையிலும், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.

அத்துமீறல்
இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் ராணுவத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டுள்ளது. இருந்த போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் ரஷ்ய வீரர்கள் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தப் போர் சமயத்தில் ரஷ்ய ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் சாடி வருகிறது. குறிப்பாகச் சிறுமிகளைக் கூட ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

பலாத்காரம் & பாலியல் வன்முறை
இந்நிலையில், உக்ரைனில் போர் சமயத்தில் நடந்த பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை குறித்து புகார்கள் பற்றிய புகார்கள் அதிகரித்து வருவதாக மூத்த ஐ.நா அதிகாரி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் பலாத்காரத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் ரஷ்ய மனித உரிமைக் குழுக்கள் சாடியுள்ளன. இதுவரை மட்டும் 12 பெண்கள் மற்றும் சிறுமிகளை ரஷ்ய ராணுவம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளதாக உக்ரைனின் மனித உரிமைக் குழுவான La Strada-Ukraine தெரிவித்துள்ளது.

ரஷ்யா அட்டூழியம்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் பேசிய அதன் தலைவர் கேடரினா செரெபாகா, "இதுவரை 12 பெண்கள் மற்றும் சிறுமிகளை ரஷ்ய வீரர்கள் பலாத்காரம் செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இது உக்ரைனில் நடக்கும் மோசமான அட்டூழியங்களின் சிறு பகுதி மட்டுமே ஆகும். உக்ரைன் நாட்டில் பலாத்காரத்தையே ரஷ்யப் படைகள் இப்போது ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்பாக ஐநா உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்" என உருக்கமாகத் தெரிவித்தார்.

தாக்குதல்
ரஷ்யப் படைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் கூறியது. இது மட்டுமின்றி உக்ரைன் நாட்டில் இருக்கும் அப்பாவி மக்களைக் குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுவதுமாக மறுத்துள்ளது.

ரஷ்யா விளக்கம்
இது தொடர்பாக ரஷ்யாவின் ஐ.நா. துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே பல முறை கூறியதைப் போல, ரஷ்யா ராணுவம் ஒருபோதும் அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தாது. உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்ய வீரர்களைக் கொடூரமானவர்களாகக் காட்டத் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என்று சாடியிருந்தார். அதேநேரம் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் பெண்கள் நிர்வாக இயக்குநர் சிமா பஹோஸ் தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications