Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஸ்பெஷல் டீம்கள்.. அதானி லஞ்ச வழக்கை விசாரிக்கும் இந்திய அமெரிக்கர்கள்.. இவ்வளவு நடந்து இருக்கா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதானி விவகாரத்தால் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன. அவரது சொத்து மதிப்பும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த லஞ்ச வழக்கில் கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்காவில் மொத்தம் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை அங்குள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து வழக்குகளை நடத்தவுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அதானி மீது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு கிரிமினல் வழக்காகும். அதானி உள்ளிட்டோர் மீது மொத்தம் ஐந்து பெடரல் குற்றவியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இது குறித்த தகவல் வெளியானது.

adani gautam adani usa

அமெரிக்காவின் எஃப்.பி. ஐ அமைப்பு இந்த விசாரணையை நடத்திய நிலையில், இது தொடர்பான வழக்கை நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட அட்டர்னி மற்றும் அந்நாட்டின் நீதித்துறையின் குற்றவியல் பிரிவு தொடர்ந்துள்ளன.

இரண்டாவது வழக்கு: அடுத்து இன்னொரு வழக்கும் இருக்கிறது. அது சிவில் வழக்கு. நம்ம ஊர் செபியை போல அமெரிக்காவில் எஸ்இசி எனப்படும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இருக்கிறது. அவர்கள் சார்பில் சிவில் வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளை அமெரிக்காவின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் விசாரித்துள்ளனர். பல இந்திய அமெரிக்கர்களும் இந்த வழக்கை நடத்தவுள்ளனர். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எஃப்.பி.ஐ டீம்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எஃப்.பி.ஐ அலுவலகத்தின் உதவி இயக்குநர் ஜேம்ஸ் இ டென்னி என்பவர் இந்த விசாரணையை நடத்தியிருந்தார். அதானிக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுகள் வெளியான போது அங்கு டென்னியும் இருந்தார். அமெரிக்க மரைன் பிரிவில் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய இவர், 2002ம் ஆண்டு எஃப்.பி.ஐ ஸ்பெஷல் ஏஜெண்டாக சேர்ந்தார்.

நியூயார்க் அலுவலகத்தில் இவர் பல கவுன்ட்டர் ஆப்ரேஷன்களில் பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய இவர், சில ஆண்டுகளில் நியூயார்க் ஆபீஸின் சிறப்பு-ஏஜென்ட்-இன்-சார்ஜ் ஆக பதவி உயர்வு பெற்றார். சைபர் கிரைம், சுகாதார மோசடி, சிவில் உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல வழக்குகளை அவர் விசாரித்துள்ளார்.

அட்டர்னி அலுவலகம்: நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட அட்டர்னி ஆபீஸ் சார்பில் அங்குள்ள அட்டார்னி பிரியோன் பீஸ் என்பவர் இதில் விசாரணை நடத்தியிருக்கிறார். அதானி குற்றச்சாட்டு குறித்த அறிவிப்பு வந்த போது இவரும் அங்கு இருந்தார். 53 வயதான பீஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் சட்டம் பயின்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வழக்கறிஞராக உள்ள இவர், நியூயார்க் சட்டப் பள்ளியில் சில காலம் பேரசிரியாகவும் இருந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சர்வதேச சந்தையில் ஊழலை அகற்றுவதே எங்கள் முதன்மை பணி.. நமது நிதிச் சந்தைகளைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்த முயல்பவர்களிடமிருந்து நமது முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார். அதானி வழக்கை வணிக மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உதவி அட்டர்னிகள் சாரா எம் எவன்ஸ், மேத்யூ ஆர் கலியோட்டி, ஜெசிகா கே வெய்கல் ஆகியோர் நடத்தவுள்ளனர்.

நீதித்துறை கிரிமினல் டிவிஷன்: அமெரிக்காவின் நீதித்துறை கிரிமினல் டிவிஷன் சார்பில் மோசடி பிரிவும் இந்த வழக்கை விசாரித்தது. அதன் துணை உதவி அட்டர்னி ஜெனரல் லிசா எச் மில்லர் இந்த வழக்கை விசாரித்தார். கடந்த 2021ம் ஆண்டு இந்த பதவிக்கு வந்த அவர் அப்போது முதல் சுமார் 200 வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இதற்கு முன்பு மில்லர் மேஜர் மோசடிப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். அங்கு அவர் 45 வழக்கறிஞர்கள் பணியைக் கண்காணித்தார். பத்திரங்கள், கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்து உள்ளிட்ட வழக்குகளை அப்போது அவர் கண்காணித்தார்.

வெளிநாட்டு ஊழல் சட்டப் பிரிவு வழக்கறிஞர் ஜாக்சன், மோசடிப் பிரிவின் ஆண்ட்ரூ டைலர் ஆகியோர் இந்த வழக்கை நடத்துவார்கள். பல குற்ற வழக்குகளை நடத்தியுள்ள சட்ட வல்லுநர்கள் லியாம் மெக்நெட், ஏஞ்சலினா டைலர் மற்றும் நதியா சிங் ஆகியோர் இந்த வழக்கை நடத்த உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்: பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் சார்பில் அமலாக்கப் பிரிவின் செயல் இயக்குநர் சஞ்சய் வாத்வா இந்த வழக்கை நடத்துகிறார். இந்திய அமெரிக்கரான சஞ்சய், அமலாக்கப் பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார். பத்திர சந்தையில் நடக்கும் விதி மீறல்கள் குறித்து விசாரிக்கும் இந்த அமைப்பு, தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து முடிந்தவரைப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திரும்ப தரும் பணியைச் செய்து வருகிறது. கடந்த அக். 11ம் தேதி தான் அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.

சவுத் டெக்சாஸ் சட்ட கல்லூரி மற்றும் நியூயார்க் சட்ட கல்லூரியில் சட்டம் பயின்றுள்ள சஞ்சய், கடந்த 2003ம் ஆண்டு இந்த எஸ்இசி அமைப்பின் வழக்கறிஞராக பணியில் இணைந்தார். சிறப்பாக பணியாற்றிய இவர் நியூயார்க் அலுவலகத்தில் அமலாக்கத்தின் இணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். இதற்கு முன்பும் இவர் பல்வேறு முக்கிய பதவிகளில் வேலை செய்துள்ளார். சட்ட விதிகளை மீறுவோர் அது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இவரது டீமில் பிராந்தியத்தின் இணை இயக்குநர் தேஜல் டி ஷாவும் இருக்கிறார். அதானி லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரியாக இவர் இருக்கிறார். கடந்த 2014இல் எஸ்இசி பிரிவில் சேர்ந்த இவர், தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியதால் குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்றார். கடந்தாண்டு இணை இயக்குநராக நியமிக்கப்படும் முன்பு இவர் அந்நாட்டின் அமலாக்கத் துறையின் சீனியர் ஸ்பெஷல் கவுன்சிலில் பணியாற்றி இருக்கிறார்.

அதானி கிரீன் மீதான எஸ்இசி விசாரணையை அமலாக்கப் பிரிவின் ஆலோசகர்களான நிக்கோலஸ் கரசிமாஸ், ஸ்டீவர்ட் 'ஸ்டூ' கில்சன், கிறிஸ்டோபர் எம் கொலராடோ மற்றும் அலிசன் கான் ஆகியோர் நடத்துகிறார்கள். கராசிமாஸ், கில்சன் மற்றும் கொலராடோ ஆகியோர் இந்த வழக்கை வழிநடத்துவார்கள். இணை பிராந்திய விசாரணை ஆலோசகர் டேனியல் லாஸ் இதை மேற்பார்வையிடுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+