மக்கள் கொஞ்சம் உஷார்தான்... இந்த ஆண்டு அதிகம் தேடிய வார்த்தை… கொரோனா பெருந்தொற்று!
வாஷிங்டன்: இந்த ஆண்டு அதிக மக்களால் தேடப்பட்ட வார்த்தை கொரோனா தொற்று என்று மெரியம் வெப்ஸ்டர் என்ற இணையதள அகராதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி என கொரோனாவை தொற்று என அறிவித்தபோது, கோடிக்கணக்கான மக்கள் அந்த வார்த்தையை தேடியதாக மெரியம் வெப்ஸ்டர் கூறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இணையதள அகராதி நிறுவனமான மெரியம் வெப்ஸ்டர் , தனது நிறுவன அகராதியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக தேடப்படும் வார்த்தையை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டில் அந்த அகராதியில் கொரோனா தொற்று(பாண்டமிக்) என்ற வார்த்தையை அதிகம் பேர் தேடியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் கூறியதாவது:
உலகம் முழுவதும் கால் பதித்துள்ள கொரோனா முதன் முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அது விஸ்வரூபம் எடுத்தபோது, மார்ச் 11-ஆம் தேதி அதனை பெருந்தொற்று(பாண்டமிக்) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அந்த நாளில் மட்டும் உலகம் பல கோடிக்கணக்கான மக்கள் இந்த வார்த்தையை தேடி பார்த்தனர். அதாவது 2019-ல் இதே மார்ச் 11-ஆம் தேதியை விட 2020 மார்ச் 11-ல் சுமார் 115,806% அதிகம் அளவுக்கு இந்த வார்த்தை தேடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பாண்டமிக்(pandemic) என்பது கிரேக்க வார்த்தையாகும். pan என்பது அனைத்து அல்லது ஒவ்வொன்று, demic என்பது மக்கள் என்பதை குறிக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. சில நேரங்களில் ஒரு சொல் ஒரு சகாப்தத்தை வரையறுக்கிறது. இந்த கடினமான இந்த ஒரு சொல் உடனடியாக முன்னணிக்கு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ல் இந்த அகராதியில் அவர்கள் என்ற வார்த்தை அதிகமாக தேடப்பட்டுள்ளது. 2018ல் நீதி என்ற வார்த்தையும், 2017-ல் பெண்ணியம் என்ற வார்த்தையும் அதிகமாக தேடப்பட்டுள்ளன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications