பூமியை விட 2 மடங்கு.. தண்ணீர் இருக்கும் புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா.. மனிதர்கள் வாழ முடியுமா?
வாஷிங்டன்: பூமியை விட இருமடங்கு பெரிய புதிய கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது. இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்று நாசா ஆய்வு செய்து வருகிறது.
கற்பனைக்கும் எட்டாத பெரிய பால்வெளி மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கும் என்ற கருத்தை பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். பூமியைப் போலவே கண்டிப்பாக வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளது என்பதால் மற்ற கிரகங்களை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பூமியைப் போன்ற ஒரு கிரகத்திற்கான தேடல் என்பது சூரியக் குடும்பம், பால்வீதி கேலக்ஸிகளையம் தாண்டிவிட்டது.

சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உண்டா என்ற ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், தான் பூமியை போலவே புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. நாசாவின் Hubble Space தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாறைகள் நிறைந்த கிரகத்தின் வளிமண்டலங்களில் நீர் மூலக்கூறுகள் நிறைந்து இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய சான்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால் வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும் போது இது பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications