அமெரிக்காவில் அதிசயம்.. 100 அடி பள்ளதாக்கில் விழுந்தும் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிறுவன்..எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்காவில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு வழிவிடுவதற்காக விலகிய போது, தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த வியாட் என்ற 13 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
ஒருவருக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் அதிர்ஷ்டம் வரும், துரதிஷ்டம் வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. திடீரென தடுக்கிவிழுந்து இறந்தவர்களும் உண்டு.பல அடி தூரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவர்களும் உண்டும்.

ஒருவர் மலைப்பகுதியில் 100 அடி தூரத்தில் இருந்து விழுந்தும் உயிர் தப்பி உள்ளார் என்றால், உங்களால் நம்ப முடிகிறது. ஆம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிர் பிழைத்துள்ளான். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் வடக்கு ரிம் என்ற பிரபலமான சுற்றுலா தளம் காணப்படுகிறது. இந்த வடக்கு ரிம் சுற்றுலா தளம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதான அழகான மலைவாசல் சுற்றுலா தளம் ஆகும்.
இந்த வடக்கு ரிம் சுற்றுலா தளம் டிசம்பர் தொடங்கி மே 2வது வாரம் வரை பனி பொழிவு காரணமாக மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்படும். இந்த சுற்றுலா தளத்திற்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியும் கிடையாது. அதேநேரம் வடக்கு ரிம் சுற்றுலா தளம் கோடைகாலத்தை முன்னிட்டு மே இரண்டாம் வாரம் முதல் அக்டோபர் 15 வரை திறந்திருக்கும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடைக்காலத்தின் போது வருவார்கள் . ரம்மியமாக காட்சியளிக்கும் மலைப்பகுதியில் மக்கள் உற்சாகமாக இருப்பார்கள்.

இந்நிலையில் வடக்கு ரிம் சுற்றுலா தளத்தினை சுற்றி பார்க்க செவ்வாய்கிழமை அன்று வியாட் காஃப்மேன் என்ற 13 வயது சிறுவன் குடும்பத்தினருடன் சென்றுள்ளான். அப்போது போட்டோ எடுப்பவர்களுக்கு வழிவிட்டுள்ளான். திடீரென எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தாக்கில் (30 மீட்டர்) சிறுவன் வழுக்கி விழுந்தான். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி சிறுவனை பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த சிறுவன் வியட்டை, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு மீட்பு குழுவினர் கொண்டு சென்றனர். இப்போது சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிறுவன் வியட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புகைப்படம் எடுக்க விரும்பியவர்ளுக்கு இடம் கொடுக்க முயன்ற போது பாறையை பிடித்தபடி நான் சற்று விலகினேன். அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் இருந்து என் கைபிடி நழுவியது. நான் பின்நோக்கி விழுந்தேன். அதன்பிறகு சுயநினைவு இல்லை. ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டேன். பின்னர் ஹெலிகாப்டரில் என்னை மருத்துவனைக்கு கொண்டு சென்றார்கள் என்றான்.
சிறுவன் வியாட்டிற்கு கீழே விழுந்ததில் முதுகெலும்பு ஒன்பது இடங்களில் உடைந்தது. மேலும் சிறுவனின் மண்ணீரல் கிழிந்தது, அவரது கையும் உடைந்தது. நுரையீரலும் பாதிக்கப்பட்டது .தலையில் அடிபட்டதால் மூளையதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. கை விரல் உடைந்து இருந்தது. மருத்துவர்கள் போராடி சிறுவனை காப்பாற்றினார்கள்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications