புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாதான் முழு பொறுப்பு.. உண்மைக்கு புறம்பாக பேசிய டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாதான் முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல் முறையாக இரு அதிபர் வேட்பாளர்களும் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்ப் மீது ஜோ பிடன் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் பலியானதாக சுட்டிக் காட்டிய ஜோ பிடன், வேறு எந்த நாட்டிலும் பலி எண்ணிக்கை இத்தகைய அளவுக்கு இல்லை என்றார். அதற்கு பதிலளித்த டிரம்ப், கொரோனா இறப்புகளை இந்தியாவும் சீனாவும் துல்லியமாக கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து பருவநிலை மாற்றம் குறித்த விவாதம் நகர்ந்தது. அப்போது ஜோபிடன் கூறுகையில் பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் விலகிவிட்டார். தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவேன் என அமெரிக்க மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உலகின் புவி வெப்பமயமாதலுக்கு 15 சதவீதத்திற்கு அமெரிக்காவே பொறுப்பு என ஜோ பிடன் சொல்லி முடித்த கையோடு டிரம்ப் இந்தியா மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். டிரம்ப் கூறுகையில் மற்ற நாடுகள், அமெரிக்காவை விட புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாதான் காரணம்.
சீனா மாசுக்களை காற்றில் பறக்க விடுகிறது. ரஷ்யாவும், இந்தியாவும் அதே தவறை செய்கின்றன என்றார் டிரம்ப். இந்தியாவை நட்பு நாடு என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர் என்றும் வாய்க்கு வாய் கூறும் டிரம்ப், இந்தியா மீது அவ்வப்போது உண்மைக்கு புறம்பான மற்றும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications