நிர்வாணம்.. உடலில் ஆடையின்றி ரோட்டில் நடந்து சென்ற நடிகையால் பரபரப்பு.. டிரைவர்கள் ஷாக்..என்னாச்சு?

அமெரிக்காவில் பிரபல நடிகையான 36 வயது நிரம்பிய அமண்டா பைனஸ் நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபல நடிகை ஒருவர் உடலில் ஒட்டுத்துணி கூட இன்றி சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

அமெரிக்காவில் பிரபல நடிகையாக இருந்தவர் அமண்டா பைனஸ். இவருக்கு வயது 36. இவர் 1990, 2000 ம் காலக்கட்டத்தில் ஏராளாமன திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் ஏ கேர்ள் வான்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

இதனால் அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறிப்போனார். அதன்பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டு இருந்தார்.

ஆடையின்றி நடந்து சென்ற நடிகை

ஆடையின்றி நடந்து சென்ற நடிகை

இந்நிலையில் தான் அமண்டா பைனஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தார். அப்போது அவர் திடீரென்று உடலில் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக தெருவில் நடந்து சென்றார். இதை பார்த்தவர்கள் அதிர்சசியடைந்தனர். மேலும்அவர் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதன் டிரைவர்களிடம் பேசியுள்ளார்.

விரைந்து வந்த போலீஸ்

விரைந்து வந்த போலீஸ்

அப்போது டிரைவர் ஒருவரிடம் தான் மனநல காப்பகத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அமண்டா பைனஸை மீட்டனர். இதையடுத்து மனநல நிபுணர் அவரை பரிசோதித்து பார்த்தார். அப்போது அவர் ‛பைபோலார் டிஸ்சார்டர்' எனும் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

3 நாள் சிகிச்சை போதும்

3 நாள் சிகிச்சை போதும்

மேலும் அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மனநலகாப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 3 நாள் சிகிச்சை தேவையானதாக உள்ளது. ஒருவேளை அவர் பாதிப்பில் இருந்து மீளாவிட்டால் கூடுதல் காலம் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவரை காப்பகத்தில் வைத்து மனநல பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சிகிச்சையை கைவிட்ட நிலையில்...

சிகிச்சையை கைவிட்ட நிலையில்...

மேலும் இதற்கு முன்பு அமண்டா மனநல சிகிச்சையில் இருந்ததாகவும், சமீபத்தில் அவர் சிகிச்சையை கைவிட்ட நிலையில் பிரச்சனையை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+