"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் வெடிக்கும் என்ற பரபரப்பான சூழலே நிலவுகிறது. இதற்கிடையே அங்கு அமெரிக்காவுக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது பகீர் கிளப்பியுள்ளது. அந்த ஹெலிகாப்ட்டரை ஈரான் தான் தாக்கியதாகவும் அதற்குப் பதிலடி கொடுக்கப் போவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது நிலைமையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. நேரடியான போர் நின்றுவிட்ட போதிலும் பதற்றம் தணியவில்லை. மேலும், அவ்வப்போது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது.

Donald Trump middle east tension Iran

அமெரிக்க ஹெலிகாப்டர்

இதற்கிடையே ஓமன் கடற்கரை அருகே அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில், அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான AH-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று ஓமன் கடற்கரை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரெனக் கடலில் விழுந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரான் படைகள் நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளன. இதில் இருந்த இரண்டு விமானிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டிப்பாகப் பதிலடி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம்

அதிபர் டிரம்ப் இது ஒரு தாக்குதல் என்று கூறினாலும், அமெரிக்க ராணுவம் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. ஹெலிகாப்டர் விழுந்ததை உறுதி செய்த ராணுவம், அதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட வீரர்கள் இருவரும் நிலையாத இருப்பதாகவும் அவர்களுக்குப் பெரியளவில் காயம் இல்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.

ஆளில்லா படகு

இந்த விபத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்க அமெரிக்க ராணுவம் முதன்முறையாக ஒரு ஆளில்லா தானியங்கி படகைப் பயன்படுத்தியது. 24 அடி நீளம் கொண்ட கோர்செய்ர் (Corsair) என்பது ஒரு தானியங்கி படகாகும். இது மனிதர்கள் இல்லாமலேயே இயங்கும் திறன் கொண்டது. இந்த ஆளில்லா படகு கடலில் தத்தளித்த வீரர்களைக் கண்டுபிடித்து மீட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏஐ தொழில்நுட்பங்களை ராணுவத்தில் இணைக்கும் அமெரிக்காவின் 'டாஸ்க் ஃபோர்ஸ் 59' திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

அப்பாச்சி ஹெலிகாப்டர்

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மிகவும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தக்கூடியவை. இவை பெரும்பாலும் எதிரிகளின் படகுகளைக் கண்காணிக்கவும், வான்வழிப் பாதுகாப்பு வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஈரான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா இவற்றைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. அது இப்போது விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரானுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ராணுவம் இதுவரை 5 போர் விமானங்கள், 7 எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 24க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+