அமெரிக்காவில் நுழைய தடை.. பாலஸ்தீனம் உள்பட 7 நாடுகளை குறிவைத்து டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.பின்னணி
வாஷிங்டன்: பாதுகாப்பு காரணங்களுக்கான சிரியா, பாலஸ்தீனம் உள்பட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில் அந்த நாடுகளின் பெயர்கள் மற்றும் தடையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இந்நிலையில் தான் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் அதிரடியாக தடை விதித்து வருகிறார்.

அந்த வகையில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி புர்கினா பாஸோ, மாலி, நிகர், தெற்கு சூடான், சிரியா, பாலஸ்தீனம், லாஸ், சியாரா லியான் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, ஆவணங்களை சரிபார்ப்பதில் முறையில் அலட்சியம் காட்டுவது, அமெரிக்காவுக்கு வந்த பிறகு விசா காலம் முடிந்த பிறகும் தங்குவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
இதில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாவில் பயங்கரவாத குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்தது. இதற்கு அமெரிக்கா சப்போர்ட் செய்தது. இதனால் அந்த பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்களால் நாட்டுக்கு ஆபத்து வரலாம் என்று கருதி பாலஸ்தீன அதிகாரிகள் கொடுக்கும் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்போருக்கும் அமெரிக்காவில் நுழைய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லாஸ் மற்றும் சியாரா லியான் உள்ளிட்ட நாடுகளை ஏற்கனவே அமெரிக்காவின் பாதியளவுக்கான கட்டுப்பாட்டு லிஸ்ட்டில் இருந்தது. தற்போது அந்த இருநாடுகளை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான், பர்மா, சாத், காங்கோ, ஈக்குவடாரியல் கயானா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications